சட்டையில் ஒரே ஒரு பட்டன். எங்க வீட்டு மாப் பிள்ளை சீதா லட்சுமி கொடுத்த போஸ்.

0
174061
seethalakshmi

தமிழ் தொலைக்காட்சிகளில் ரசிகர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை கொடுக்க ஒவ்வொரு தொலைக்காட்சியும் போராடி வருகிறது. மேலும், சினிமா பிரபலங்களை வைத்து பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகின்றனர். விஜய் சேதுபதி, கமல், மீனா, ரோஜா, அரவிந்த் சாமி என்று ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு பிரபலங்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளனர். அந்த வகையில் கடந்த ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிளை’ நிகழ்ச்சியும் ஒன்று.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் போட்டியாளராக கலந்து கொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகை சங்கீதா க்ரிஷ் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இறுதியில் வெல்லும் நபரை ஆர்யா, திருமணம் செய்துகொள்வார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இறுதியில் யாரையும் திருமணம் செத்துக்கொள்ளாமல் டிமிக்கி கொடுத்துவிட்டார்.

இதையும் பாருங்க : பிகில் இயக்குனர் வீட்டில் விசேஷம். பிகில் அடித்து கொண்டாடும் அட்லீ – பிரியா.

- Advertisement -

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சயிஷாவை திருமணம் செய்து கொண்டார். எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் சுசானா, ஆகாதா , சீதாலட்சுமி என்று மூவர் முன்னேறினார்கள். இதில் சீதா லட்சுமி, கேரளா மிஸ் பிட்னஸ் பட்டதை வென்றவர். மேலும் , இவர் மருத்துவராகவும் இருந்துள்ளார். எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு பின்னர் ஆர்யா திருணம் செய்து கொண்டபோது பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறினார்கள்.

மேலும், ஆர்யாவின் திருமணம் குறித்து பேசிய சீதாலட்சுமி, ஆர்யா திருமணம் செய்து கொண்டார் என்பதைக்கூட வலைதளங்கள் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். அவர் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களுக்கு நேரடியாகவோ அல்லது போன் செய்தோ சொல்லியிருக்கலாம். தற்போது வரை தனிப்பட்ட முறையிலும் ,துறை ரீதியாகவும் நாங்கள் அனைவரும் நெருக்கமான தொடர்பில் தான் இருக்கிறோம். அவர் எங்களுக்கு கூட சொல்லாதது மனதிற்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்றும் கூறியிருந்தார் .

-விளம்பரம்-

மாடல் அழகி என்பதால் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் சீதாலட்சுமி. அந்த வகையில் சமீபத்தில் சட்டையில் ஒரே ஒரு பட்டனை மட்டும் அணிந்து கொண்டு சீதா லட்சுமி சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement