பிகில் இயக்குனர் வீட்டில் விசேஷம். பிகில் அடித்து கொண்டாடும் அட்லீ – பிரியா.

0
215117
priya-atlee
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் அட்லி திகழ்ந்து வருகிறார். தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ள திரைப்படம் தான் “பிகில்”. மேலும்,பிகில் படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூல் வேட்டையும் அள்ளித் தந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து விஜய்யின் பிகில் படம் ரசிகர்களிடையே வெறித்தனமாகி உள்ளது. இயக்குனர் அட்லீ அவர்கள் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர், திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டவர். அட்லி இயக்குனர் அவர்கள் தமிழ் திரைப்படங்களில் பிரமாண்ட இயக்குனர் என்று சொல்லப்படும் ஷங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

-விளம்பரம்-
Image

மேலும்,அட்லீ அவர்கள் நண்பன் மட்டும் எந்திரன் ஆகிய படங்களில் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் இயக்குனர் அட்லீ அவர்கள் அவரை விட்டு வந்து 2013 ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ திரைப்படத்தை இயக்கி உள்ளார். மேலும், இந்த படம் ரசிகர்களிடையே பயங்கர வரவேற்பை கொடுத்தது. அதுமட்டும் இல்லாமல் இயக்குனர் அட்லீ அவர்கள் முதல் படத்திலேயே வேற லெவல்ல தெறிக்க விட்டார். மேலும்,’ராஜா ராணி’ படம் செம்ம ஹிட் கொடுத்தது. இதற்கு பின்னர் இவர் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் தெறி, மெர்சல் ஆகிய இரண்டு படங்களையும் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் இவர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்று கூட சொல்லலாம். மேலும்,விஜய்யின் இந்த இரண்டு படங்களும் திரை உலகில் மாஸ் காட்டியது.

இதையும் பாருங்க : இனி இந்திராவும், சக்தியும் இவங்க தான். ஆயுத எழுத்து சீரியலில் மாற்றம்.

- Advertisement -

இப்படி இந்த சிறு வயதிலேயே அட்லீ இயக்கத்தில்வெளி வந்த அனைத்து படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது. இந்நிலையில் தற்போது விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைந்து இயக்குனர் அட்லீ அவர்கள் பிகில் படத்தை இயக்கியுள்ளார். பிகில் படம் மற்ற இரண்டு படங்களை விட ரசிகர்களிடையே தூள் கிளப்பியது என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு திரையரங்குகளில் பட்டைய கிளப்பி வருகிறது. இப்படி சினிமா துறைக்குள் நுழைந்த சில காலங்களிலேயே மாபெரும் ரசிகர் கூட்டத்தையும், பாராட்டையும், புகழையும் சம்பாதித்தவர் இயக்குனர் அட்லி. மேலும், இயக்குனர் அட்லீ குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும், மீம்ஸ்களும் எழுந்து வந்தாலும் இவர் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. மேலும்,இந்த இளம் வயதில் சாதிப்பது ஒரு பெரிய விஷயம் தான்.

ஏனென்றால் சினிமா துறையில் பல படங்களை கொடுத்த பிறகு தான் வெற்றி கிடைக்கும். ஆனால், இவருடைய முதல் படத்தில் இருந்து தற்போது வரை வெற்றியே தான் வந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் சினிமா துறையில் சாதிக்கத் துடிக்கும் பல பேருக்கு இவரை ஒரு முன்னுதாரணமாக வைக்கலாம் என்று கூட கருத்துக்கள் வருகின்றது. இதனைத்தொடர்ந்து இவர் கனா காணும் காலங்கள் சீரியல் தொடங்கி பல சீரியல்கள் நடித்தும், வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்த பிரியா அவர்களை காதலித்தார். பின் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

நடிகை பிரியா அவர்கள் எப்போதும் தங்களுடைய இருவரின் ஜோடிப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் இவர்களுக்கு இன்று திருமண நாள். இதற்காக தன் கணவர் அட்லீக்கு ஒரு சூப்பரான ஸ்பெஷல் வாழ்த்துக்களையும் தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சிறந்த நண்பருடன் 43,823 நேரம் என் மனைவியுடன் என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அவர் வெளியிட்டு உள்ள புகைப்படத்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது என்றும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement