தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் ஆர்யா – நடிகை சயிஷாவை திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இவர், ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்துள்ளார்.
இந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது ஆரம்பத்தில் ஆர்யாவை சயிஷாவிற்கு திருமணம்செய்து வைக்க ஆயிஷாவின் அம்மாவிற்கு விருப்பமில்லை என்ற ஒரு செய்தியும் வெளியாகி இருந்தது. ஆனால், அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் இவர்கள் திருமணத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இதையும் படியுங்க : ஆர்யா- சயிஷா திருமணம்.! ஷாக்கிங் விடியோவை வெளியிட்ட எங்க வீட்டு மாப்பிளை குஹாசினி.!
மேலும் , இவர்களது திருமணம் சாயிஷாவின் சொந்த ஊரான ஹைதராபாத்தில் நடைபெற்றது. கடந்த வாரம் (மார்ச் 8) இவர்களின் திருமண வரவேற்பு மிகவும் சிம்பிளாக நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பில் இருவீட்டாரின் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் ஒருசில பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆர்யா பங்குபெற்ற ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற சீதாலட்சுமி, ஆர்யா தங்களை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், ஆர்யா திருமணம் செய்து கொண்டார் என்பதைக்கூட வலைதளங்கள் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். அவர் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களுக்கு நேரடியாகவோ அல்லது போன் செய்தோ சொல்லியிருக்கலாம். தற்போது வரை தனிப்பட்ட முறையிலும் ,துறை ரீதியாகவும் நாங்கள் அனைவரும் நெருக்கமான தொடர்பில் தான் இருக்கிறோம். அவர் எங்களுக்கு கூட சொல்லாதது மனதிற்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.