40 கதையை ரிஜட்சட் செய்து அஸ்வின் நடித்த ‘என்ன சொல்ல போகிறாய்’ எப்படி இருக்கு – முழு விமர்சனம்.

0
1135
aswin
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது.அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் அஸ்வினும் ஒருவர். இந்த சீசனில் பலரது பெண்கள் மனதையும் கவர்ந்தவர் அஸ்வின் தான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல ஆல்பம் பாடல்களில் நடித்த அஸ்வின், கடந்த ஆண்டு ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘ஓ மனப்பெண்ணே’ படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இயக்குனர் ஹரிஹரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, குக்குவித் கோமாளி புகழ் என்று பலர் நடித்துள்ள இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது. படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு கேலிக்கு உள்ளாகி பின் பல சர்ச்சைகளுக்கு பின் இன்று இந்த படம் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

கதைக்களம் :

சென்னையில் உள்ள ஒரு பிரபலமான Fm ஸ்டேஷனின் Rjவாக பணியாற்றி வருகிறார் அஸ்வின் (Rj விக்ரம்). அவருக்கு தன் மனைவியாக வரப்போகும் நபரின் மீது கொஞ்சம் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் அஸ்வினின் தந்தை அவருக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண்ணை பார்க்கிறார். அவர் தான் அவந்திகா மிஸ்ரா (அஞ்சலி). எழுத்தாளராக இருக்கும் இவருக்கும் தனக்கு வரப்போகும் கணவர் குறித்து சில எதிர்பார்புகள் இருக்கிறது. அதில் மிக முக்கியமாக தனக்கு வரப் போகும் கணவருக்கு கண்டிப்பாக ஒரு முன்னாள் காதல் கதை இருக்கும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

ஆனால், அஸ்வினுக்கு அப்படி எதுவும் முன்னாள் காதலியோ, காதல் கதையோ இல்லை. இருப்பினும் அவந்திகாவை திருமணம் செய்துகொள்ள விரும்பும் அஸ்வின் தனக்கு முன்னாள் காதலி இருந்தார் என்று பொய் சொல்கிறார். மேலும், தன் முன்னாள் காதலி என்று தியேட்டர் நடிகையான தேஜு அஸ்வினியை (ப்ரீத்தி) அறிமுகம் செய்து வைத்துவிடலாம் என்று திட்டமிடுகிறார் அஸ்வின். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக தேஜு மீதே காதலில் விழுகிறார் அஸ்வின். பின் அஸ்வினுக்கு ஏற்படும் பிரச்சனைகள், அவர் யாரை திருமணம் செய்துகொண்டார் என்பதே இந்த படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

நிறைகள் :

முதல் பாதி கொஞ்சம் சுமார்

படத்தில் விவேக் – மெர்வின் பின்னணி ரொமான்டிக் இசையும், பாடல்களும் படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்க்கிறது.

படத்தில் ஒளிப்பதிவு விஷயத்தில் மெனக்கெட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன்.

அஸ்வின் – தேஜூ அஸ்வீனி இருவருக்கும் ரொமன்ஸ் போர்ஷன் படத்தில் ஆங்காங்கே கைகொடுத்து இருக்கிறது.

மற்றபடி படத்தில் சொல்லிக்கொள்ளும்படி நிறைகள் இல்லை.

குறைகள் :

வழக்கமாக அரைக்கப்பட்ட பழைய கதை தான். முதல் பாதி சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதி படு மொக்கை.

இரண்டாம் பாதியில் திரைக்கதையில் சுதப்பி வைத்து இருக்கிறார் இயக்குனர்.

அஸ்வினின் நடிப்பு மிகவும் எதார்த்தமாக இல்லை, அதிலும் குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் நடிக்க மிகவும் கஷ்டப்படுகிறார்.

குக்குவித் கோமாளியில் ஒர்க்கவுட்டான அஸ்வின் – புகழின் மாமா மச்சான் காம்போ படத்தில் சுத்தமாக ஒர்க்கவுட் ஆகவில்லை.

புகழின் காமெடி டிவியில் பார்க்க மட்டுமே எடுபடும் என்பதற்கு சபாபதி படத்திற்கு பின் இந்த படமும் ஒரு உதாரணம்.

Actor Ashwin Kumar gets emotional in Enna Solla Pogirai Audio launch; The  actor gratitude his fans

இறுதி அலசல் :

மொத்தத்தில் ரொமான்டிக் காதல் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் கதை ஒன்றும் புதிதான கதை இல்லை. மேலும், முதல் பாதி படு சுமாராக சென்றாலும் இரண்டாம் பாதியை கடப்பது மிக கடினமே. அஸ்வின் தனது நடிப்பில் இன்னும் பல மாற்றங்களை கட்டாயம் செய்தால் அவருக்கு நல்லது. 40 கதையை கேட்டு தூங்கிய அஸ்வின் இந்த கதையை கேட்டு தூங்கி இருந்தால், தியேட்டரில் ரசிகர்கள் தூங்காமல் இருந்து இருப்பார்கள். மொத்தத்தில் என்ன சொல்ல போகிறாய், செல்வத்துக்கு ஒன்றும் இல்லை.

Advertisement