குழந்தை பிறந்த பின் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து இப்படி தான் வெளியில் வர வேண்டும் – ஹரிஜா.

0
11228
harija
- Advertisement -

குழந்தை பிறந்ததற்கு பின்னர் பெருமபாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்து பேசியுள்ளார் ஹரிஜா. யூடியூப் வலைதளத்தில் எருமை சாணி என்ற பக்கத்தில் விஜய் மற்றும் ராஜா இருவரும் சேர்ந்து வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. எருமை சாணி’ சேனலில் இடம்பெற்ற விஜய், ஆர்ஜே விக்னேஷ்காந்த், மெட்ராஸ் சென்ட்ரல் கோபி, சுதாகர், ஷாரா, அகஸ்டின் என்று பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள்.இதில் ஒரு சிலர் தற்போது சினிமாவிலும் ஜொலித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-18-594x1024.jpg

மேலும், எருமை சாணி சேனலில் நடித்த விஜய் மற்றும் ராஜா இருவரும் காதலித்து வருவதாகவும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சில தகவல்கள் வெளியானது. ஆனால், தாங்கள் இருவரும் நண்பர்களாகத்தான் பழகி வந்தோம் என்று இருவருமே கூறினார்கள் மேலும், ஹரிஜா வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஹரிஜா, அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவருடன் ஷார்ட் பிலிம்களில் ஹரிஜா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : நெஞ்சம் மறப்பதில்லை படம் புரியலயா – இந்த ட்விட்டர் பதிவை பாருங்க கண்டிப்பா புரியும். வைரலாகும் Decoding பதிவு.

- Advertisement -

மேலும் இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து ஷார்ட் பிலிம்ஸ்களில் நடித்து வருகிறார் ஹரிஜா. இப்படி ஒரு நிலையில் ஹரிஜா, கற்பமாக இருந்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் இவருக்கு வளைகாப்பு நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் ஹரிஜாவிற்கு கடந்த மார்ச் 11 ஆ, சிவராத்திரியில் குழந்தை பிறந்தது. இதனை தனது சமூக வலைதளத்தில் வித்யாசமான முறையில் அறிவித்து இருந்தார் ஹரிஜா.

அதாவது ஹரிஜா மற்றும் அவரது கணவர் இருவரும் சிவன் மற்றும் பார்வதி ஆக இருப்பது போல புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்து இருந்தார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒருவர், ஹரிஜாவிடம் குழந்தை பிறந்த பின் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து எப்படி வெளியே வருவது என்று கேட்டிருந்தார். இதற்கு ஹரிஜா, அது அவ்வளவு சுலபமல்ல, அதை பற்றி நான் இன்னமும் கற்றுக்கொண்டு இருக்கிறேன். அதில் இருந்து நான் கண்டுபிடித்தது, அதனை எப்படி கையாள வேண்டும் என்பது நம் கையில் தான் இருக்கிறது. என்னுடைய எதிர்பார்ப்பை நான் மறைத்துவிட்டேன் என்று பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement