ஈஸ்வர் மஹாலட்சுமி விவகாரம். தற்கொலைக்கு முயன்ற நடிகை. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

0
24409
Mahalakshmi
- Advertisement -

தமிழ் சின்னத்திரை நடிகர்களான ஈஸ்வர் மகாலட்சுமி ஜெயஸ்ரீ விவகாரம்தான் கடந்த சில காலமாக தமிழ் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையாக சென்றுகொண்டிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேவதையை கண்டேன் தொடரில் ஒன்றாக நடித்து வந்தவர்கள் நடிகர் ஈஸ்வர் மற்றும் லட்சுமி. இவர்கள் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் இதனை கேட்ட போது தனது கணவர் தன்னை தாக்கியதாக ஈஸ்வரின் மனைவியும் நடிகையுமான ஜெயஸ்ரீ காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

-விளம்பரம்-
jayashree tamil serial actress suicide attempt isvar raghunathan mahalakshmi

- Advertisement -

ஜெயஸ்ரீ அளித்த புகாரின் பேரில், ஈஸ்வரை போலீசார் கைது செய்தனர். ஆனால், ஈஸ்வர் விரைவில் ஜாமீனில் வெளிவந்தநிலையில் , ஜெயஸ்ரீ தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார், தற்போது சென்னை நீலகரை என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூக்க மாத்திரைகள் அதிகமாக உட்கொண்டதால் ஜெயஸ்ரீ இப்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், ஜெயஸ்ரீ ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதிகப்படியான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உள்ள ஜெயஸ்ரீ தனது நண்பர் ஒருவருக்கு போன் செய்து கூறியிருக்கிறார்.

இதையும் பாருங்க : கோமாளி படத்தில் வரும் பஜ்ஜி கடை ஆன்டியா இது ? பார்த்தா வாயில கைவச்சி ஷாக்காவீங்க.

பின்னர் ஜெயஸ்ரீயின் நிலைமையை அறிந்த அந்த நண்பர் உடனடியாக விரைந்து ஜெயஸ்ரீயை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஜெயஸ்ரீ ஏன் இந்த விபரீத முடிவு குறித்து பிரபல பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. அதில் ஜெயஸ்ரீ பெயரில் வாங்கிய கடன்கள் எக்கச்சக்கமாக இருந்துள்ளது .தற்போது ஈஸ்வர் கடன் வாங்கிய நபர்கள் ஜெயஸ்ரீயை தொல்லை செய்து வந்துள்ளார்கள். இதனால் ஜெயஸ்ரீ மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இது ஒருபுறமிருக்க ஈஸ்வர் மகாலட்சுமி நடித்துவந்த தேவதையை கண்டேன் தொடர் விரைவில் முடிந்து விடும் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.

-விளம்பரம்-
மருத்துவமனையில் ஜெயஸ்ரீ

ஆனால், அந்த தொடரை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து உள்ளதாகவும் நம்பகரமான தகவல் வெளியாகியிருந்தது. போதாத குறைக்கு சமீபத்தில் தேவதையை கண்டேன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த மகாலட்சுமியும் ஈஸ்வரம் பழையபடி பழகி வருவதாகவும் இதனால் வெறுத்துப்போன ஜெயஸ்ரீ தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் அந்த பிரபல பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஜெயஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement