எதிர்நீச்சல் சீரியல் குணசேகரனின் ஆரம்ப கால வாழ்க்கை குறித்த சுவாரசியமான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பி வாழுகிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக மிரட்டி வருபவர் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் மாரிமுத்து. இந்த சீரியலில் நடிக்கும் கதாநாயகி மற்றும் கதாநாயகனை காட்டிலும் அதிகமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். அதிலும் இவர் தன்னுடைய தம்பிகளை கூடவே இருக்க வேண்டும் என்ற பாசத்தினால்தான் இப்படி நடந்து கொள்கிறார் என்று ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கூறி வருகின்றனர்.
இவர் இதற்கு முன்பே வெள்ளி திரையில் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் கொடி கட்டி பறந்தாலும் இவருடைய ஆரம்ப கால வாழ்க்கை பல கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறார். இந்நிலையில் மாரிமுத்து சமீபத்தில் பேட்டி ஓன்று கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் நடிகர் மாரிமுத்துவின் ரசிகர்கள் எல்லோரும் அதிரும் வண்ணம் ஒரு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மையை சொன்னார்.
அதாவது தான் “எதிர் நீச்சல்” சீரியலில் வில்லனாக நடிப்பதினால் சீரியலை விட்டு வெளியில் நிஜ வாழ்கையிலும் அதோ போல என்னை பார்த்தால் திட்டுகின்றனர். வெளியில் சென்றால் கூட என்னுடைய எதிரில் வந்தால் இந்த வழி வேண்டாம் என்று வேறு வழியில் சென்று விடுகின்றனர். அதனை பாரத்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. மேலும் அது என்னுடைய நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக நான் எண்ணுகிறேன் என்று கூறினர்.
மேலும் அந்த பேட்டியில் தனக்கு அழுகையே வாராது என்று கூறியிருந்தார். ஆனால் இவர் சிரியலில் நடிக்கும் போது எதற்கெடுத்தாலும் அழுவது, சாமி படத்திற்கு முன்னர் சென்று புலம்புவது என தன்னுடைய தாம்பிகை தன் வலையில் போட்டு வைத்திருக்கிறார். இப்படியிருக்குபோது தான் அழுததே இல்லை என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு பிறகு தான் ஏன் அழுவதில்லை என்ற காரணத்தையும் கூறினார்.
கடவுளே இல்லை என்று கூறும் நடிகர் மாரிமுத்து, தன்னுடைய அப்பா மறைத்த போது கூட நெஞ்சில் வருத்தம் இருந்தாலும் அவர் அவருடைய வாழ்க்கையை வாழ்ந்து விட்டார், எல்லோரும் ஒருநாள் போகத்தான் போகிறோம் என்ற உண்மை நிலையை அறிந்து நடந்து கொள்வதாக கூறினார். அதோடு சீரியலில் அழுவதற்கு கிளிசரினை ஊறித்தான் அழுது வருவதாகவும் தான் நிஜ வாழ்க்கைக்கு தகுந்தவாறு எதார்த்தத்தை நம்புவதால் தனக்கு அழுகை வராது என்று அந்த பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை கூறியிருந்தார் நடிகர் மாரிமுத்து.