‘எனக்கு எப்படி திருமணம் ஆச்சின்னே தெரியாது ‘ – சீரியலை போல நிஜ வாழ்க்கையிலும் திருமணத்தால் சந்தித்த பிரச்சனை குறித்து ஹரிப்பிரியா.

0
2262
Haripriya
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து ஹரிப்ரியா அளித்திருக்கும் பேட்டியை பார்த்து ரசிகர்கள் பாராட்டி வரும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்பவர் நடிகை ஹரிப்பிரியா. சொல்லப்போனால், இவரை இசை என்றால் தான் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவிற்கு பிரியமானவள் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் ஹரிப்ரியா.

-விளம்பரம்-

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் நுழைந்தவர். இதை தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு என்ற தொடரில் நடித்தார். பின் சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்த பிரியமானவள் என்ற தொடரில் இசை என்ற கதாபாத்திரத்தில் ஹரிப்ரியா நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் என்று சொல்லலாம்.

- Advertisement -

ஹரிப்ரியா குடும்பம் பற்றிய தகவல்:

மேலும், இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இதனிடையே நடிகை ஹரிப்ரியா அவர்கள் 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். பின் திடீரென்று விவாகரத்து செய்வதாக இவர்கள் இருவருமே அறிவித்து இருந்தார்கள். பிரிவிற்கு பிறகு ஹரிப்ரியா தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியல்:

தற்போது இவர் தொகுப்பாளர், நடிகை என பிஸியாக இருக்கிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலருமே விரும்பி பார்த்து வருகிறார்கள். தற்போது இந்த சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் அப்பாவி குணம் கொண்ட நந்தினி கதாபாத்திரத்தில் ஹரிப்பிரியா நடித்து கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

ஹரிப்ரியா அளித்த பேட்டி:

நந்தினி ரோல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப் பெரிய ரீச் கிடைத்திருக்கிறது. இவருடைய நடிப்பை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஹரிப்ரியா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், இந்த சீரியலில் எனக்கு எப்படி திருமணம் நடந்தது என்று எனக்கே தெரியாது. இனி வரும் காலத்தில் தான் கதையெல்லாம் எனக்கு தெரியவரும். சில நாட்களுக்கு முன்பு தான் ரேணுகாவின் திருமணம் வெளியே வந்தது. அதேபோல வரும் நாட்களில் கூட என்னுடைய திருமணம் எப்படி நடந்தது என்பது தெரிய வரும்.

சீரியல் குறித்து சொன்னது:

அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் நான் கதிரிடம் அதிகமான முறை நிஜத்திலும் அடி வாங்கி இருக்கிறேன். ஒரு சில முறை நடிப்புக்காக அடித்தாலும், அது நிஜத்திலும் நம் மீது விழுந்து விடும். அந்த மாதிரி தான் எனக்கு கிடைத்திருக்கிறது. நான் வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் பலரும் எதிர்நீச்சல் சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தை குறித்து பாராட்டுகின்றனர். குறிப்பாக, நான் ஒரு ஈவென்ட்க்கு போயிருக்கும் போது ஒரு பேங்க் ஆபிஸர் பெண் என்னிடம், நானும் சில வருடங்களுக்கு முன்பு உங்களுடைய நிலைமையில் தான் இருந்தேன். ஆனால், இன்று நான் இந்த நிலைமையில் இருக்கிறேன். நான் வாழ்க்கையில் ஜெயித்து விட்டேனா என்று எனக்கு தெரியாது. ஆனால், கண்டிப்பாக நீங்கள் ஜெயிக்க வேண்டும். நீங்கள் ஜெயித்தால் எனக்கு சந்தோஷம் என்று கூறினார். இப்படி அவர் என்னை பாராட்டியது என்னால் மறக்கவே முடியாது என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement