ஜனனியை பழி வாங்க வந்து இருக்கும் இந்த புதிய வில்லன் ராமசாமி யார் தெரியுமா? செம ட்விஸ்ட் கொடுத்த இயக்குனர்.

0
687
Ethirneechal
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். வாரம் வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் தான் உச்சத்தில் இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம், வீட்டு பெண்கள் எல்லோரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்கள். இதை அறிந்து குணசேகரன் கோபப்படுகிறார். பின் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த அப்பத்தா இறந்து விடுவதைப் போல காண்பிக்கிறார்கள். இன்னொரு பக்கம், ஜீவானந்தத்தை போலீஸ் கைது செய்து விடுகிறார்கள்.

குணசேகரன்- ஈஸ்வரி தேர்தல்:

சக்தி- ஜனனி இருவரும் அப்பத்தாவின் கேசை நடத்த சாருபாலாவிடம் கேட்கிறார்கள். அவரும் ஒத்து கொள்கிறார். பின் சேர்மன் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் குணசேகரன்- ஈஸ்வரி இருவரும் எதிர் எதிரே நிற்கிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் ஆதிரை தன் கழுத்தில் இருக்கும் தாலியை கழற்றி போட்டு அருண் வீட்டிற்கு சென்று விடுகிறார். உடனே குணசேகரன் என்னுடைய மகள் தர்ஷினியை உன் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன், இது சத்தியம் என்று ஜான்சி ராணியிடம் சொல்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் வீட்டின் பெண்கள் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் ப்ரோமோ:

கடந்த வாரம் சனிக்கிழமை எபிசோட்டில் கிருஷ்ணன் மெய்யப்பன் மற்றும் அவருடைய அண்ணன் ராமசாமி மையப்பன் குணசேகரன் வீட்டிற்கு வருகிறார்கள். பின் குணசேகரன்- ராமசாமி இருவருமே நன்றாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது குணசேகரன் ஒவ்வொருவராய் அறிமுகம் செய்து கொண்டிருக்கும் போது ஜனனி என்னுடைய எதிரி. என்னுடைய தாத்தாவின் பெயருக்கு இழுக்கு ஏற்படாமல் நடந்து கொள்வேன். என்னுடைய தாத்தாவிற்கு அவமானம் நடந்தது வெளி ஆட்களால் இல்லை. வீட்டில் இருந்த நபரால் தான். அந்த நபர் முதுகில் குத்தி விட்டு சென்று விட்டார் என்று கூறுகிறார்.

ரசிகர்கள் கேள்வி:

இப்படி இவர் கூறியது ஜனனியின் அப்பாவாக இருக்குமோ? என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதாவது, ஜனனியின் அப்பா மிகப்பெரிய வசதியான குடும்பத்தை சேர்ந்த பையன். இவர் தான் காதலித்த பெண்ணிற்காக குடும்பம், சொத்து எல்லாத்தையும் விட்டு வெளியே வந்து விடுவார். தற்போது ராமசாமி சொல்லி இருக்கும் நபர் ஜனனியின் அப்பாவாக இருக்குமோ? என்று கேட்டு வருகிறார்கள். இனி வரும் நாட்களில் தான் இதற்கான விடை தெரியும்.

Advertisement