போன வருஷம் மாதிரி Troll செய்தால் – கணவருக்கு பாத பூஜை செய்த புகைப்படத்தை வெளியிட்டு சூர்யா பட நடிகை விளாசல்.

0
1734
- Advertisement -

கணவருக்கு பாத பூஜை செய்த புகைப்படத்தை வெளியிட்டு சூர்யா பட நடிகை ட்ரோல்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் பிரனீதா சுபாஷ். கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரனீதா சுபாஷ். அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிட்ச்சியமானார்.

-விளம்பரம்-
Pranitha

மேலும், சூர்யா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மாஸ் படத்தில் அப்பா சூர்யா கதாபாத்திரத்திற்கு மனைவியாக பிரனீதா சுபாஷ் நடித்து இருந்தார். இவருக்கு அழகான தோற்றம் இருந்த போதும் கார்த்தி மற்றும் சூர்யாவை தவிர வேறு எந்த முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக இவர் அதர்வா நடிப்பில் வெளியான ‘ஜெமினிகணேசனும் சூரிளிராஜனும்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

பிரணிதா சுபாஷ் திரைப்பயணம்:

பின் தமிழில் வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் இவர் பிற மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது பிரனீதா சுபாஷ் அவர்கள் கன்னடம், தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அது மட்டும் இல்ல தற்போது ஹிந்தியில் வெளியாக இருக்கும் புஜ் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரனீதா சுபாஷ் அறிமுகமாக இருக்கிறார். இதனை அடுத்து இவர் தமிழ் சினிமாவில் இருந்து சிறிது காலம் இடைவெளி எடுத்திருக்கிறார்.

பிரணிதா சுபாஷ் திருமணம் செய்த நபர்:

இப்படி ஒரு நிலையில் இவர் திடீர் திருமணம் செய்து கொண்டது இவரது ரசிகர்களுக்கு பெரும் ஷாக்கை ஏற்படுத்தியது. இவர் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த 2021ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தார்கள். பின் இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் எளிமையாக நடந்தது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

பிரணிதா சுபாஷ் திருமணம்:

இதனை அடுத்து தன்னுடைய திருமணத்தை உறுதி செய்ததை பிரனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து தன் கணவரின் பிறந்தநாளில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார் பிரணிதா. இந்த நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்து இருந்தது. இந்நிலையில் இன்று Bheemana Amavasya என்பதால் கணவரின் பாதங்களுக்கு பூஜை செய்து இருக்கிறார்.

கணவருக்கு பாத பூஜை :

அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் அவர், கடந்த வருடம் போல ட்ரோல்கள் வந்தால் எனக்கு கவலை இல்லை, ஹிந்து மத சடங்குகள் மீது தனக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார். “இது ஆணாதிக்கத்தை குறிக்கிறது என ட்ரோல் செய்கிறார்கள், அதில் எனக்கு உடன்பாடில்லை. இந்து மதத்தில் பெண் கடவுள்களும் சமமாக வணக்கப்படுவது தெரியும்” என பதிவிட்டு இருக்கிறார். 

Advertisement