பிரபல வெளிநாட்டு வீதியிலும் எதிர் நீச்சல் – பெருமையுடன் பகிர்ந்த நடிகை.

0
1573
- Advertisement -

நியூயார்க் வீதியில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ஃபர்ஹானா புகைப்படம் வெளியாகியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியின் உச்சசத்தில் இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆகி கொண்டு இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த தொடர் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களால் எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல், அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள்.

சீரியலின் கதை:

தற்போது சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் பெண்களை வைத்து தன்னுடைய விளையாட்டை தொடங்குகிறார். இதனால் குணசேகரனனுக்கு வலது புறம் கை செயலிழந்து விட்டது போல் நடிக்கிறார். அதோடு ஜீவானந்தத்தை பழிவாங்க குணசேகரனும் அவருடைய தம்பி கதிரும் சேர்ந்து சென்னைக்கு சென்று போலீசாக இருக்கும் கிள்ளி வளவனை சந்தித்து ஜீவானந்தத்தை போட்டு தள்ள முயற்சிக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஜீபா ஷெரின் குறித்த தகவல்:

இன்னொரு பக்கம் ஜீவானந்தத்தை பற்றி தெரிந்து கொள்ள ஜனனியும் சக்தியும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சீரியலில் பர்ஹானா ரோலில் நடிக்கும் ஜீபா ஷெரின் குறித்த வீடியோ தான் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, இந்த சீரியலில் ஜீவானந்தம் கதாபாத்திரத்திற்கு பி.ஏவாக நடித்து வருபவர் ஜீபா ஷெரின். இவர் சமூக புரட்சி செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நிஜத்திலும் இவர் இப்படி தான். முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் ஆடையை அணிவது குறித்த சர்ச்சைக்கு இவர் தொடர்ந்து குரல் கொடுத்து இருக்கிறார்.

ஜீபா ஷெரின் பதிவிட்ட வீடியோ:

மேலும், இவர் எதிர்நீச்சல் சீரியலிலும் முஸ்லிம் பெண்ணாகவே நடித்து வருகிறார். எதிர்நீச்சல் சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் அறியப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்காவின் முக்கிய வீதிகளில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ஜீபா வீடியோ ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோவை ஜீபா தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்து, இதை என்னால் நம்பவே முடியவில்லை ! இவ்வளவு அன்பை நான் இந்த உலகத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இதற்கு இயக்குனர் திருசெல்வம் அவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று உற்சாகத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement