அட, ஜெயிலர் வில்லனுக்கும் சென்ராயனுக்கும் இப்படி ஒரு உறவா ? அதான் ஒரே மாதிரி இருக்காங்களா

0
5153
- Advertisement -

ஜெயிலர் படத்தில் வில்லனாக மிரட்டி இருக்கும் நடிகர் விநாயகம் குறித்து பலரும் அறிந்திறாத தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் எல்லா படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஆனால், சமீப காலமாக ரஜினி நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து தற்போது ரஜினி “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் பாடல்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இன்று ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

படத்தில் ரஜினி அவர்கள் ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்று இருக்கிறார். இவர் தன்னுடைய மனைவி ரம்யா கிருஷ்ணன், மகன் வசந்த் ரவி மற்றும் பேரன் ரித்திக் உடன் அரக்கோணத்தில் அமைதியாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ரஜினியின் மகன் வசந்த ரவி காவல்துறையில் உதவி கமிஷனராக இருக்கிறார். அப்போது சிலை கடத்தல் கும்பலை பிடிக்க செல்லும்போது ரஜினியின் மகன் வசந்த ரவியை அந்த கும்பல் கொன்றுவிடுகிறார்கள். இதனால் அந்த கும்பலை பழிவாங்க ரஜினி கிளம்புகிறார்.

ஜெயிலர் பட வில்லன்:

படத்தில் ரஜினி அவர்கள் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும் இறுதியில் ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார். ரஜினியை அடுத்து வில்லனாக வரும் மலையாள நடிகர் விநாயகம் தன்னுடைய நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். சொல்லப்போனால், இவர் ஒரு வித்தியாசமான வில்லன் ரோலில் கலக்கி இருக்கிறார் என்று சொல்லலாம். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

விநாயகம் நடித்த படங்கள்:

மேலும், இவர் வேற யாரும் இல்லைங்க, திமிரு பட நடிகர். விஷால் நடித்த திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக, நடக்க முடியாதவராக விநாயகம் நடித்திருந்தார். சின்ன வில்லனா நடித்த இவர், தற்போது ஜெயிலர் படத்தில் பெரிய வில்லனா கலக்கி இருக்கிறார். அதோடு இவர் பிக் பாஸ் பிரபலம் சென்றாயன் உறவுக்காரர். அதாவது, சென்றாயனுக்கு இவர் அண்ணன் முறை என்று கூறப்படுகிறது. இவர் மலையாள சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக இருக்கிறார். இவர் 25 வருடத்திற்கு மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் திமிரு படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

விநாயகம் திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் சிலம்பாட்டம், மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தார். பின் தமிழில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இவர் மலையாள மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் ஜெயிலர் படத்தில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். இதற்கிடையில் இவர் மீது மீட்டு புகார் எழுந்திருந்தது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை எழுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement