‘சிம்பு,ஜீவா என்று பல நடிகர்களின் சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய்துள்ள ஜெய் – அவர் சொன்ன காரணங்களை கேளுங்க.

0
1641
Jai
- Advertisement -

சூப்பர் ஹிட் படங்களின் வாய்ப்பை தவறவிட்டது குறித்து நடிகர் ஜெய் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜெய். இவர் விஜயின் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த பகவதி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் சென்னை-28, சுப்ரமணியபுரம், சரோஜா, கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, வடகறி, திருமணம் எனும் நிக்கா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இடையில் இவருடைய படங்கள் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை. இருந்தாலும், சமீப காலமாக இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜெய் நடிப்பில் வெளிவந்த படம் வீரபாண்டியபுரம். சுசீந்திரன் இயக்கத்தில் இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் பிரேக்கிங் நியூஸ், குற்றம் குற்றமே, காபி வித் காதல், எண்ணித் துணிக, காக்கி உட்பட பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.

- Advertisement -

ஜெய் திரைப்பயணம்:

அதுமட்டுமில்லாமல் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பார்ட்டி. இந்த படம் கூடிய விரைவில் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பட்டாம்பூச்சி. இந்த படத்தை பத்ரி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி, ஹனிரோஸ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். கடைசியாக ஜெய் நடிப்பில் வெளியாகி இருந்த படம் காபி வித் காதல். இந்த படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார். மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

ஜெய் தவற விட்ட படங்கள்:

தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஜெய் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், நான் சுப்பிரமணியம் படம் பண்ணிட்டு இருக்கும்போது எஸ்எம்எஸ் படத்தில் நடிக்க கேட்டிருந்தார்கள். அப்போது நான் நீளமாக தாடி வைத்திருந்தேன். பின் எனக்காக ஒரு நாலு மாசம் காத்திருந்தார்கள். சரியான நேரம் அமையாததால் அதற்குப் பிறகுதான் அவர்கள் வேரு நடிகரை வைத்து எடுத்தார்கள்.

-விளம்பரம்-

ஜெய் அளித்த பேட்டி:

சுப்பிரமணியபுரம் படத்திற்கு பிறகு கௌதம் மேனன் சாருடைய ப்ராஜெக்ட்டில் ஒரு படம் பண்ண வாய்ப்பு கிடைத்தது. அதுவும் தவறவிட்டேன். அந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. நான் கௌதம் மேனன் தயாரிப்பில் ஒரு படம் பண்ணினேன். அப்போதுதான் இந்த தகவலை சொன்னார். அதற்கு பிறகு ராட்சசன் படமும் நான் பண்ண வேண்டியதுதான். அதற்காக நானும் அந்த இயக்குனரும் ஆறு மாசம் ட்ராவல் பண்ணி இருந்தோம்.

நெட்டிசன்கள் கருத்து:

போலீஸ் கெட்டப் எப்படி இருக்கணும், இந்த கதாபாத்திரம் இப்படி என்றெல்லாம் பேசி இருந்தோம். ஆனால், புரொடக்ஷன் மாறியதால் அந்த படத்தில் என்னால் பண்ண முடியாமல் போனது என்று கூறி இருந்தார். இப்படி ஜெய் அளித்திருக்கும் பேட்டிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், ஒருவேளை இந்த சூப்பர் ஹிட் படங்களில் ஜெய் நடித்திருந்தால் உங்களுடைய திரை வாழ்க்கை பயணமே மாறி வேற லெவலில் இருந்திருப்பீர்கள் என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement