கல்லுரியில் பேராசிரியர், தூர்தர்ஷனில் வேலை – வாழ்க்கையிலும் எதிர் நீச்சல் போட்டு வந்துள்ள கரிகாலனின் கதை.

0
2155
ethirneechal
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் செய்திருக்கும் சாதனையை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடக்கத்தில் இந்த தொடருக்கு பல எதிர்புகள் எழுந்தது. ஆனால், சமீப காலமாக இந்த தொடரில் பல பெண் புரட்சி வசனங்கள் இடம்பெற்று வருவதால் இந்த தொடருக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

-விளம்பரம்-

எதிர் நீச்சல் கரிகாலன் :

எதிர் நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் இதில் நடிக்கும் கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் விமல் குமார். இவரில் கதாபாத்திரம் வந்தாலே போது ரசிகர்களை சிரிக்க வைத்துவிடும் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார். சில எபிசோடுகளில் மட்டுமே வந்தாலும் தன்னுடைய நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் கரிகாலன் கதாபாத்திரம்.

- Advertisement -

காலேஜ் ப்ரோபோசார் :

இந்த நிலையில் தான் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்துள்ளார் கரிகாலன். அப்படி பேட்டி கொடுத்த அவர் கூறுகையில் இந்த இடத்திற்கு நான் வருவதற்கு பல கஷ்டங்களை தாண்டி வந்திருக்கிறேன். என்னுடைய ஊர் திருநெல்வேலி, அங்கே உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் BE மானவர்க்ளுக்கு ப்ரோபோசராக பணியாற்றி இருக்கிறார். ஆரம்பத்தில் அரசாங்க வேலை செய்யவேண்டும் என்று தான் வளர்த்திருக்கிறார்.

கிரிக்கெட் மீது ஆர்வம் :

கிரிக்கெட்டின் மீது கொண்ட ஆசையினால் கல்லூரி ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். அதனால் இவரது நண்பர்கள் கூட எக்ஸ்பிரஸ் விமல் என்று தான் அழைப்பார்களாம். அந்த அளவிற்கு வேகப்பந்து வீச்சளராக இருந்திருக்கிறார். டிஎன்பிஎல் போவதற்கு வயதாகிவிட்டது என்பதினால் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க கல்லூரியில் சேர்ந்துள்ளார். அதே நேரத்தில் மீடியாக்களிலும் பகுதி நேர வேலை பார்த்துள்ளார்.

-விளம்பரம்-

ஆல் இந்திய ரேடியோவில் ஆர் ஜே :

அந்த நேரத்தில் இவருக்கு அவருடைய அப்பா ஆல் இந்தியா ரேடியோவில் வேலை பார்ப்பதற்கு விண்ணப்பம் வாங்கி கொடுத்துள்ளார். அந்த தேர்வில் இவர் வெற்றிபெற்று திருநெல்வேலி ஆல் இந்தியா ரேடியோவில் ஆர்.ஜே.வாக வேலை செய்திருகிறார். அப்போது பல பிரபலங்களின் இறப்புக்கு இரங்கல் செய்தி கூறுவாராம். அப்போதுதான் துர்தர்ஷனில் கவிதை போட்டியில் கலந்து கொண்டதுதான் தன்னுடைய வாழ்க்கையே மாற்றியதாம்.

போராட்டங்களுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு :

அங்கே தானே எழுதிய காவிதையை கூறியிருக்கிறார். இது அவர்களுக்கு பிடித்து போக ஆர் ஜே வாக வேலை செய்ய அழைத்துள்ளார்கள். வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அதன் பின்னர் ஆர் ஜே, வி ஜே என 300க்கும் மேற்பட்ட நேர்காணல்களை செய்திருக்கிறாராம். ஆனால் ஒரு நேர்காணல் எடுக்க செல்கிறோம் என்றால் அதில் வருமானம் சாப்பட்டிற்கே சரியாக இருக்குமாம். நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் புகைப்படம் எடுக்க கூட உடை விஷியத்தில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாம். அதற்கு பிறகு தான் எதிர் நீச்சல் சிரியலில் பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisement