மாரிமுத்து இல்லாமல் முதல் இடத்தை தக்க வைத்ததா எதிர் நீச்சல் ? – இந்த வாரம் Trp விவரம் இதோ.

0
1822
- Advertisement -

ஆதி குணசேகரன் இல்லாமல் எதிர்நீச்சல் சீரியலின் இந்த வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இவர்கள் கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். இப்படி சீரியல் பரபரப்புடனும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கின்றது.

மாரிமுத்து இறப்பு:

இந்த நிலையில் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து திடீரென்று மாரடைப்பால் இறந்திருப்பது பலருக்குமே பேரதிர்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக எதிர்நீச்சல் ரசிகர்கள் பலருமே தங்களுடைய வருத்தத்தை தெரிவித்திருந்தார்கள். அடுத்த குணசேகரன் யார் என்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்து வருகிறது. இருந்தாலுமே மாரிமுத்துவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று வருத்தத்துடன் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து:

இந்த சீரியலின் வெற்றிக்கு இவர் தான் காரணம். அது மட்டும் இல்லாமல் கடந்த வாரம் மட்டும் தான் மாரிமுத்துவின் கடைசி காட்சிகள் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த வாரம் அவருடைய காட்சிகள் எதுவும் இல்லை. இதனால் சீரியலை வேற டிராக்கில் இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார். அதோடு மாரிமுத்து இல்லாமல் இனி சீரியல் நிலைமை என்ன ஆகுமோ? என்று பலரும் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.

சீரியல் டிஆர்பி:

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் தான் வெளியாகியிருக்கிறது. அதில் மாரிமுத்து இல்லாமலும் எதிர்நீச்சல் சீரியல் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. 10.79 ரேட்டிங்கில் இருக்கிறது. இரண்டாம் இடத்தை கயல் சீரியல் 10.74 ரேட்டிங் பெற்றிருக்கிறது. மூன்றாவது இடத்தை சுந்தரி சீரியலும், நான்காவது இடத்தை வானத்தைப்போல சீரியலும், ஐந்தாவது இடத்தை இனியா தொடரும் பிடித்திருக்கிறது.

Advertisement