எல்லாம் என் குழந்தைகளுக்கு தான்,அவர்களுக்காக இது கூட செய்யக் கூடாதா – கண்ணீர் விடும் பப்ளி நடிகை

0
1312

சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் நயன்தாராவுடன் போட்டி போடும் அளவிற்கு இருந்த ஹன்சிகா தற்போது வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். உடம்பினை குறைத்து பாலிவுட்டில் ஒரு ஐட்டம் சாங் கூட ஆடிப்பார்த்தார் ஆனால் அங்கேயும் எடுபடவில்லை.

தற்போது கிடைக்கும் விளம்பரங்களில் எல்லாம் நடித்து வருகிறார். லெஜன்ட் சரவணாவுடன் நடித்த அந்த விளம்பரத்தை வைத்து ஹன்சிகாவின் தோழிகள் எல்லாம் கிண்டல் செய்து கலாய்த்து சிரித்துள்ளனர்.

ஆனால் இரக்க குணம் கொண்ட ஹன்சிகா கூறியது என்ன தெரியுமா,

எல்லாம் என் குழந்தைகளுக்காகத் தான். அவர்கள் சந்தோசமாக இருக்க இது கூட செய்யக் கூடாதா.? அவர்களுக்கு ஒரு நல்ல வீடு கட்ட வேண்டும்..

எனக் கூறியுள்ளார் ஹன்சிகா.

தற்போது 30 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ஹன்சி. இவர்கள் சரியாக உண்டு உறைவிட ஒரு நல்ல வீடு கட்ட வேண்டும் என்பதுதான் ஹன்சியின் நோக்கமாம்.