இளம் வயது முதல் பெரியவர்கள்கள் வயது வரை ஏற்படும் நோய் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பகத் பாசில் கூறி இருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் பகத் பாஸில். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் வேற யாரும் இல்லை, இயக்குனர் பாசிலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் பாசில் அவர்கள் தமிழில் பிரபலமான இயக்குனர் ஆவார்.

இதனிடையே பகத் பாஸில் அவர்கள் நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நஸ்ரியாவும் தென்னிந்திய சினிமாவுலகில் பிரபலமான நடிகையாக திகழ்பவர். மேலும், நடிகர் பகத் அவர்கள் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகுக்கு அறிமுகமாகியிருந்தார். அதன் பின் மலையாளத்தில் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பின் தமிழில் இவர் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், தெலுங்கு மொழியில் வெளிவந்த புஸ்பா போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார்.
பகத் பாசில் திரைப்பயணம்:
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருந்தது. உலகம் முழுவதும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள். இந்த படத்தில்பகத் பாசிலின் நடிப்பு மிரள வைத்து இருந்தது என்றே சொல்லலாம். இதனை அடுத்து பகத் பாஸின் நடிப்பில் வெளியாகியிருக்கும் மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்து இருந்தார்.
மாமன்னன் படம்:
இந்த படத்தின் மூலம் பகத் பாசில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். தற்போது பகத் அவர்கள் ட்ரெண்டிங் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் ஆவேசம். இந்த படத்தை ஜித்து மாதவன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பகத் பாசில் உடன் ஹிப்ட்ஸர், மிதுன், ரோஷன் ஷநவாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்திருக்கிறார்.
நிகழ்ச்சியில் பகத் பாஸில் சொன்னது:
தற்போது இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கொத்தமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பகத் பாஸில் கலந்து கொண்டிருந்தார். அதில் அவர், கிராமத்தில் சுற்றி விளையாடும் குழந்தைகளுக்கு கவனக்குறைவு மற்றும் அதிக செயல்பாடு கோளாறு நோயை கண்டுபிடிக்க முடியுமா? என்று டாக்டரிடம் கேட்டேன்.
நோய் குறித்து சொன்னது:
அதற்கு அவர் இதை சிறுவயதிலேயே கண்டறிந்து விட்டால் எளிதாக குணப்படுத்தலாம் என்று கூறினார்.
பின்னர் 41 வயதில் இந்த வியாதியை கண்டறிந்தால் குணப்படுத்த முடியுமா? என்று கேட்டேன். அதற்கு அவர், கவனக்குறைவு ,அதிக செயல்பாடு என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சி கோளாறு. இது மூளையின் கவனம், நடத்தை, உந்துவிசை கட்டுப்பாட்டை கட்டுப்படுத்தும் திறனை பாதிக்கும். இது குழந்தைகளில் பொதுவானது ஆனால், பெரியவர்களையும் பாதிக்கலாம் என்று கூறி இருக்கிறார்.