விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில் அலுவலகத்தில் வருமான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்திருக்கும் விஷயத்தை அறிந்து மீனா பதறி போய் ஆபீஸிற்கு வந்தார். செந்தில் ரொம்பவே பயத்தில் இருப்பது அறிந்து மீனா ஆறுதல் சொன்னார். பின் செந்தில், மீனா இருவரும் வீட்டிற்கு வந்து விட்டார்கள். அப்போது மீனா, என்ன நடந்தது? எதற்காக பயப்படுகிறீர்கள்? நீங்க வீட்டில் வைத்த பணம் லஞ்ச பணமா? என்றெல்லாம் கேட்டார். செந்தில், வேறு வழி இல்லாமல் எல்லா உண்மையும் சொல்லி விட்டார். இதனால் கொந்தளித்த மீனா, செந்திலை திட்டி விட்டு அங்கிருந்து சென்றார்.

குமார், எனக்கு எப்படியாவது அரசியை கல்யாணம் பண்ணி வையுங்கள். அரசி இல்லாமல் என்னால் வாழ முடியாது என்றெல்லாம் புலம்பினார். காந்திமதி, உனக்கு அரிசயை நான் திருமணம் செய்து வைக்கிறேன். இது சத்தியம். ஆனால், நீ நான் சொல்வது போல் நடந்து கொள் என்றார். இதை எல்லாம் கேட்ட பழனி, காந்திமதி இடம் சண்டைக்கு போனார். காந்திமதி, எல்லாம் எனக்கு தெரியும் என்று சொன்னார். அதற்குப்பின் செந்தில், மீனாவிற்கு எல்லா உண்மையும் தெரிந்த விஷயத்தை தன்னுடைய மாமனாரிடம் சொல்லி புலம்புகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
ரவி, அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள் என்று அறிவுரை எல்லாம் சொன்னார். செந்தில், இனிமேல் நான் லஞ்சம் வாங்க மாட்டேன் என்றார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த செந்திலிடம் மீனா, உங்களை யார் இப்படி எல்லாம் செய்ய சொன்னது என்று விசாரித்தார். செந்தில், தன்னுடைய மாமனார் சொல்லி தான் இப்படி எல்லாம் செய்தேன் என்ற உண்மையை சொல்லிவிட்டார். இதனால் கொந்தளித்த மீனா, தன்னுடைய அப்பா என்று கூட பார்க்காமல் ரவியை வெளுத்து வாங்குகிறார். ரவியால் எதுவுமே பேச முடியாமல் திணறுகிறார். இருந்தாலும் மீனா, தன்னுடைய அப்பாவை திட்டி தன்னுடைய கணவரை விட்டு ஒதுங்கி இருக்க சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காந்திமதி, பாண்டியனிடம் அரசியிடம் பெண் கேட்கும் விஷயத்தைப் பற்றி வீட்டில் பேசுகிறார். வழக்கம் போல சக்திவேல் கொந்தளிக்கிறார். ஆனால், முத்துவேல் எந்த மறுப்பும் சொல்லவில்லை. குமார் தன் அப்பாவை திட்டி அமைதியாக இருக்க சொல்கிறார் . பின் காந்திமதி, பழனி இருவரும் பாண்டியனின் வீட்டிற்கு பெண் கொண்டு செல்கிறார்கள். காந்திமதி, குமார், அரசியை விரும்புகிறான். இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று சொல்கிறார்.

இதை கேட்டவுடன் கோமதி, வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார். தன்னுடைய அம்மா என்று கூட பார்க்காமல் சண்டை போடுகிறார். அந்த சமயம் பார்த்து அரசி வருகிறார். பின் பாண்டியன், காந்திமதி சொன்ன விஷயத்தை சொல்கிறார். அரசி, எனக்கு குமாரை சுத்தமாக பிடிக்காது. நான் அவனை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று காந்திமதி முகத்திற்கு நேராகவே சொல்லிவிடுகிறார். அதனால் வருத்தப்பட்டு காந்திமதி அங்கிருந்து சென்று விடுகிறார். பாண்டியன் ரொம்பவே சந்தோஷப்படுகிறார்.






