‘என்ன பழக்கம்னா இது’ – நெட்டிசன்கள் போட்ட கமண்டுகளால் மாமன்னன் கவர் போட்டோவை நீக்கிய பஹத் பாஸில்

0
2009
Fahad
- Advertisement -

மாமன்னன் படத்தில் தான் நடித்த ரத்னவேல் கதாபாத்திரம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தனது முகநூல் பக்கத்தில் கவர் போட்டோவை மாற்றியுள்ளார் பஹத் பாஸில். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன்.

-விளம்பரம்-

இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்நடித்திருந்தார் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் நடித்துஇருந்தனர். இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் ரகுமான் இசை அமைத்திருந்தார். படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம்.

- Advertisement -

மாமன்னன் படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தினை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படம் Netflix தளத்தில் வெளியாகி இருந்தது. பொதுவாக ஒருபடம் திரையரங்கில் வெளியான போது வரும் விமர்சனங்களை விட அதே படம் Ottயில் வெளியாகும் போது தான் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்படும்.

வைரலாகும் பஹத் மீம்ஸ் :

அந்த வகையில் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியான போது சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டதை விட தற்போது தான் சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக நடித்த பகத் பாஸிலின் கதாபாத்திரத்தை ஹீரோ போல மாற்றி பல்வேறு நடிகர்களின் பாடல்களை எடிட் செய்து ஒரு சிலர் கொண்டாடி வருகின்றனர். ராஜ ராஜ சோழனுக்கு பின்னர் அனைத்து ஜாதியினரும் உரிமை கொண்டாடியது ரத்னவேலுவை தான் என்று பலர் கேலியாக கூறி வந்தனர்.

-விளம்பரம்-

கவர் போட்டோவை மாற்றிய பஹத் :

அதே சமயம் சாதி வெறி பிடித்தவர்கள் தான் ரத்னவேல் கதாபாத்திரத்தை கொண்டாடி வருகின்றனர் என்ற விமர்சனமும் எழுந்தது. இதனால் கடந்த இரண்டு தினங்களாக பஹத் பாஸில் தொடர்பான மீம்கள் தான் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு படத்தில் ஹீரோவை விட்டுவிட்டு வில்லனை கொண்டாடி வரும் நிலையில் தனது முகநூல் பக்கத்தில் மாமன்னன் படத்தில் தான் நடித்த கதாபாத்திரத்தின் புகைப்படங்களை கவர் போட்டோவாக வைத்திருந்தார் பஹத் பாஸில்.

போட்டோவை நீக்கிய பஹத் :

பஹத் பாஸிலின் இந்த பதிவை தொடர்ந்து ஒரு சிலர் ஜாதி வெறி பிடித்த ரத்னவேல் கதாபாத்திரத்தை ஒரு சிலர் கொண்டாடி வரும் நிலையில் இப்படி நீங்கள் போட்டோவை வைக்கலாமா என்று கேள்வி எழுப்பினர். அதே போல இன்னொரு புறம் ரத்னவேலு என்ற பெயரில் பல்வேறு சாதிய பெயர்களை இணைத்து அவரை வாழ்த்தி வந்தனர். இந்த காரணத்தினால் தான் அவர் புகைப்படத்தையே நீக்கும் அளவிற்கு ஆகிவிட்டது.

Advertisement