‘எழுந்து வா இமயமே’ 45 ஆண்டுகால நண்பனை பாட்டு பாடி மீண்டு வர சொன்ன வைரமுத்து – கைதட்டி ரசித்த பாரதிராஜா.

0
1629
- Advertisement -

பாட்டு பாடி பாரதிராஜாவின் உடல் நலத்தை வைரமுத்து விசாரித்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து இருந்தவர் பாரதிராஜா. இவரை இயக்கத்தின் இமயம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது படைப்புகள் இருந்தது. மேலும், இவர் தமிழ் சினிமாவில் சிறந்த காவியமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார்.

-விளம்பரம்-

இவர் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி -நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே கிராமத்து மண்வாசனை, உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்டது.

- Advertisement -

பாரதிராஜா திரைப்பயணம்:

அதனால் தான் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக பாரதிராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மேலும், தமிழ்`சினிமா உலகில் ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ஸ்ரீதேவி போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்து வைத்தது பாரதிராஜா தான். அதுமட்டும் இல்லாமல் இவருடைய மாணவர்களான பாக்யராஜ், பாண்டிராஜ் முதலான பல பேர் தமிழ் சினிமாவுலகில் மிக பிரபலமான இயக்குனர்களாக இருந்தனர்.

பாரதிராஜா குறித்த தகவல்:

பின் தாஜ்மஹால் படத்தில் தன்னுடைய மகனை நடிகன் ஆக்கி இருந்தார். இருந்தாலும் அவரால் தந்தை அளவிற்கு சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியவில்லை. மேலும், பாரதிராஜா ஆறு முறை தேசிய விருதும் வாங்கியிருக்கிறார். பல நடிகர்கள் இவர் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்துவிட மாட்டோமா? என்று ஏங்கியவர்கள் உண்டு. அந்த அளவிற்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அதோடு சமீப காலமாகவே பாரதிராஜா அவர்கள் படங்களை இயக்குவதை விட்டு நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

பாரதிராஜா உடல்நிலை:

இப்படி ஒரு நிலையில் சமீப காலமாகவே பாரதிராஜா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய உடல்நிலை குறித்து பலரும் பிரார்த்தனை செய்திருந்தார்கள். தற்போது பாரதிராஜாவின் உடலில் முன்னேற்றம் தெரிகிறது. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து பாரதிராஜாவை சந்தித்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கவிஞர் வைரமுத்து அவர்கள் இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து பாட்டு பாடி நலம் விசாரித்து இருக்கிறார்.

வைரமுத்து குறித்த தகவல்:

அது மட்டும் இல்லாமல் இது தொடர்பான வீடியோவையும் பதிவிட்டு எழுந்து வா இமயமே! என்று குறிப்பிட்டு இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. பாரதிராஜா இயக்கத்தில் நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.

Advertisement