இந்தியாவில் யாரிடமும் இல்லாத காரை வாங்கியுள்ள பஹத்-நஸ்ரியா. அப்படி என்ன ஸ்பெஷல். அந்த காரின் விலை தெரியுமா ?

0
1124
fahad
- Advertisement -

தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை நஸ்ரியா. தமிழில் நேரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. பிறகு ராஜா ராணி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர். அதற்கு பிறகு நையாண்டி, திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்து இருந்தார். பின் நஸ்ரியா நடிப்பில் மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் பெங்களூர் டேஸ். இந்த படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ரீமேக்காகி அந்த மொழிகளிலும் பாராட்டப்பட்டது.

-விளம்பரம்-
View this post on Instagram

💚

A post shared by Fahadh Faasil (@fahadhfaassil) on

இது நடிகை நஸ்ரியா மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்த படம். ‘பெங்களூர் டேஸ்’ வெளியான ஆண்டிலேயே அதாவது 2014 ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியா, நடிகர் பகாத் பாஸிலை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு நடிகை நஸ்ரியா அவர்கள் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. நடிகை நஸ்ரியா திருமணம் ஆனாலும் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே இன்று வரை திகழ்ந்து வருகிறார். மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேஸ் மற்றும் ஓம் சாந்தி ஓசானா ஆகிய படங்களில் நஸ்ரியா குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இதையும் பாருங்க : இந்த சம்யுக்தா யார் தெரியுமா ? இதனால் தான் என்னை கலாய்கிறார். புகைப்படத்துடன் மீரா மிதுன் போட்ட ட்வீட்.

- Advertisement -

அதோடு நஸ்ரியா நடித்த படங்களில் எல்லாம் அவர் குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இறுதியாக நடிகை நஸ்ரியா தனது கணவர் பகத் பாசிலுக்கு ஜோடியாக மலையாளத்தில் உருவாகி இருந்த “ட்ரான்ஸ்” என்ற படத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் பஹத் – நஸ்ரியா தம்பதிகள் உலகில் சொகுசு கார் நிறுவனக்ளில் ஒன்றாக கருதப்படும் போர்ஷ் நிறுவனத்தின் Porsche 911 Carrera S என்ற உயர் ரக கார் ஒன்றை வாங்கியுள்ளனர்.

image

இந்தியாவில் பைதான் பச்சை நிறத்தில் உள்ள ஒரே கார் இதுமட்டும்தானாம். அதன் ஷோரூம் விலை வெறும் ரூ. 1.90 கோடிதான். ஆனால், இதில் சில மடிபிகேஷன்களை செய்து 2.65 கோடிக்கு வாங்கியுள்ளார்கள். இந்த கார் ஒரு வினாடியிலேயே நூறு கிலோ மீட்டர் வேக பிக்கப்பை அடைந்துவிடும். ஒரு மணி நேரத்தில் 308 கிலோ மீட்டர் கடந்துவிடலாம். கடந்த ஆண்டு தான் நடிகர் பஹத் ரேஞ் ரோவரின் டாப் மாடல் SUV (british luxury utility) கார் ஒன்றை வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement