விபத்தில் சிக்கிய அஜித் என்று பரவும் போலியான வீடியோ. உண்மையில் அந்த வீடியோ வெளியானது எப்போது தெரியுமா ?

0
3796
Ajith-Valimai
- Advertisement -

வலிமை படத்தின் பைக் காட்சியின் போது அஜித் கீழே விழுந்து காயம் அடைந்து விட்டார் என்று சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருவது தான் இன்று சமூக வளைத்ததில். அஜித் ரசிகர்களால் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இந்த வருடம் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது.

-விளம்பரம்-

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். சமீப காலமாகவே தல அஜித் அவர்கள் படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார். இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார்.

இதையும் பாருங்க : முதன் முறையாக படு மார்டன் உடையில் ரோபோ ஷங்கர் மகள் நடத்திய போட்டோ ஷூட்

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் பைக் காட்சி ஒன்றில் அஜித் பைக் ஓட்டிய போது எதிர்பாராதவிதமாக அவர் பைக்கில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதனால் அவருக்கு ஒரு சில சிறுகாயங்கள் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அவர் மருத்துவ உதவிகளை எடுத்துக்கொண்டு உடனடியாக மீண்டும் சூட்டிங்கிற்கு திரும்பி அந்த காட்சிகளில் நடித்து முடித்துள்ளார். அஜித் குணமடைய அஜித் ரசிகர்கள் #GetWellSoonThala என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி உள்ளனர். இந்த ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்தது.

உண்மையான வீடியோ இது தான்

-விளம்பரம்-

மேலும், அஜித் கீழே விழுந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆனால், உண்மையில் இது வலிமை படத்தில் போது எடுக்கப்பட்ட வீடியோ கிடையாது. இந்த வீடியோ ஏற்கனவே யூடியூபில் கடந்த 2012ம் ஆண்டு வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் அந்த வீடியோவில் இருப்பது அஜித்தும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement