தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்தி – கடுப்பாகி சின்மயி வெளியிட்ட பதிவு.

0
2165
chinmayi
- Advertisement -

தான் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியானது குறித்து பாடகி சின்மயி விளக்கமளித்துள்ளார். தமிழில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகிகளில் சின்மயியும் ஒருவர். பின்ணணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இருக்கும் எண்ணெற்ற முன்னணி நடிகைகளுக்கு டப்பிங்கும் கொடுத்துள்ளார் சின்மயி. கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் #metoo விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதிலும் பிரபல பின்னணி பாடகியான சின்மயி, தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தது ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் உலுக்கியது.

-விளம்பரம்-

இந்த குற்றச்சாட்டிற்கு பின்னர் தமிழ் சினிமாவில் பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சின்மயி, தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சர்ச்சைக்குரிய பாடகி என்ற அளவிற்கு வந்து விட்டார்.வைரமுத்து மீதான பாடகி சின்மயியின் முன்வைத்த பாலியல் புகார் தமிழ் சினிமாவையே உலுக்கியுள்ள நிலையில் பாடகி சின்மயி மீது சமூகவலைத்தளத்தில் பல்வேறு கருத்து தாக்குதலை முன்வைத்தனர். சின்மயிசொல்வது பொய் என்று ஒரு தரப்பும் கூறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : கைதியிடன் இருந்து களவாடிய கதையா ‘கைதி’ – லோகேஷ் கனகராஜின் ரியாக்ஷன்.

- Advertisement -

சின்மயி கூறுவது உண்மை என்றால் அப்போதே ஏன் சொல்லவில்லை என்று மற்றொரு தரப்பும் சின்மயியை வறுத்தெடுத்து வருகின்றனர். இப்படி சின்மயி – வைரமுத்து விவகாரம் தொடர்ந்து கொண்டு இருக்க சமீபத்தில் சினமயி கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வைரலனாது. அதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் வெளியான சின்மயின் குடும்ப புகைப்படத்தில் அவர் கர்ப்பமாக இருப்பது போல தோற்றமளித்தது தான்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள சினமயி, நான் கர்ப்பமாக இல்லை. அதனால் பொய்யான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். அப்படியே குழந்தை பிறந்தாலும் சமூக வலைதளத்தில் பகிர மாட்டேன். அதோடு குழந்தை வளர்ந்த பிறகு சமூக வலைதளம் பக்கம் செல்ல விடமாட்டேன். எனது தனிப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என்று கட்டமாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement