‘ஒரு ஷாட் எடுக்க எவ்ளோ கஷ்டம் தெரியுமா’ – அண்ணாமலையை மறைமுகமாக கலாய்த்த பிரபல இயக்குனர்.

0
657
annamalai
- Advertisement -

தமிழகத்தில் சில தினங்களாகவே வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை காரணமாக சாலைகளில், வீடுகளில் எல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தத்தளித்து வருகின்றனர். கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப் பணிகள் மீட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களை அருகில் உள்ள முகாமில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருத்துவம் ஆகியவற்றையும் அரசாங்கம் வழங்கி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், மழை நீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளையும் செய்து வருகிறார்கள். இதனிடையே சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மழை கோட் அணிந்தபடியே நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்.

இதையும் பாருங்க : ஜெய் பீம் படத்தை கண்டித்தும், சூர்யாவை எச்சரித்தும் அன்புமணி கேட்ட கேள்விகள் – சூர்யா கொடுத்துள்ள பதில் அறிக்கை.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து அவர்களுடைய கஷ்டங்களைத் தெரிந்துகொண்டு நிவர்த்தி செய்து வருகின்றனர்.இதற்கிடையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்றிருந்தார்கள்.

அப்போது படகு ஒன்றில் அவர்கள் இருந்தபடியே மக்களிடம் அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்து போட்டோ மற்றும் வீடியோ எடுத்து இருந்தார்கள். மேலும், இதுகுறித்த சம்பந்தமான புகைப்படங்களும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வெளியாகியிருந்தது. இதைப் பார்ப்பதற்கு அப்படியே போட்டோஷூட் நடத்தியது போல் இருக்கிறது என்ற நெட்டிசன்கள் தாறுமாறாக கிண்டல் கேலி செய்து விமர்சித்தும் வந்திருந்தார்கள்.

-விளம்பரம்-

அதிலும் சிலர் பிஜேபி என்றாலே நாடக கம்பெனி என்பதற்கு உதாரணமாக அண்ணாமலையின் புகைப்படம் வந்திருக்கிறது என்றும் கிண்டலடித்து இருந்தார்கள். இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனரும் நடிகருமான நவீன் அவர்கள் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியது, டைரக்டரே நடித்து, கேமரா ஆங்கிள் செட் பண்ணி, ஜூனியர் ஆர்டிஸ்ட்டுக்கு எல்லாம் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து ஒரு ஷாட் எடுப்பது எவ்வளவு கஷ்டம்ன்னு அதை செஞ்சு பாத்தா எங்களுக்கு தெரியும் என்று வஞ்ச புகழ்ச்சி அணியில் பதிவிட்டிருக்கிறார். தற்போது நவீன் டீவ்ட் ரசிகர்கள் மத்தியில் ட்ரோல் ஆகி வருகிறது.

Advertisement