சாலை விபத்தில் சிக்கி பிரபல தொகுப்பாளினி திடீர் மரணம்..! – புகைப்படம் உள்ளே

0
2397
vasan

கேரளா பெண் செய்திவாசிப்பாளர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் கேரள தொலைக்களாட்சி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவிற்கு பல்வேறு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.கேரளா கிடங்கூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சூர்யா வாசன்.

surya

29 வயதாகும் இவர் பிரபல கேரளா தொலைக்காட்சியான ஸ்டார் விஷன் என்ற தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை தனது சகோதரருடன் திருவாஞ்சுரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றுள்ளார்.அவர் வண்டியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒரு வேன் ஒன்று அவரது வண்டி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டு படு காயம் அடைந்துள்ளார்.

இதையடுத்து அவரை கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவருக்கு காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நொடிகளிலேயே உயிரிழந்துள்ளார். இதை அறிந்த தொலைக்காட்சி பிரபலங்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதையடுத்து இவரது இறுதி ஊர்வலம் கடந்த சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற்றது.

Suryavasan

கேரளாவில் சாலையில் ஏற்படும் விபத்துக்கள் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வருகிறது. அதனை குறைக்க கேரளா போக்குவரத்துக்கு காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.