தங்கலான் Vs தேவர் படம் : மாரி செல்வராஜை தொடர்ந்து ரஞ்சித்தை கூறி வைக்கும் தயாரிப்பாளர். இதான் காரணமாம்.

0
278
- Advertisement -

அந்த பயம் இருக்கட்டும் என்று இயக்குனர் பா ரஞ்சித்தை தயாரிப்பாளர் சௌத்ரி தேவர் வம்பு இழுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற பல படங்களை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து தற்போது பா ரஞ்சித் அவர்கள் தங்கலான் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் கதையாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தங்கலான் படம்:

இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தினுடைய இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், மார்ச் 29ஆம் தேதி தான் தங்கலான் படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பிரபல சினிமா தயாரிப்பாளர் சௌத்ரி தேவர் அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படம் எடுக்கிறார்.

படம் குறித்த தகவல்:

இவர் இயக்கும் தேசிய தலைவர் திரைப்படம் ரஞ்சித் இயக்கிய தங்கலான் படத்தின் ரிலீஸ் போதே வெளியாக இருந்தது. இது தொடர்பாக சௌத்ரி தேவரும் சவால் விட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென்று தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு இருப்பது நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. பலருமே, என்ன ரஞ்சித் பயந்துட்டியா, நீ தான் தைரியமான ஆளாச்சே, தேசிய தலைவர் படத்துடன் உன்னுடைய படத்தை மோதவிடுவது என்றெல்லாம் கிண்டல் அடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சௌத்ரி தேவர் சொன்னது:

மேலும், இது குறித்து சௌத்ரி தேவர், தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைத்தாலும் எப்போது பா. ரஞ்சித் தங்கலான் படத்தை ரிலீஸ் செய்கிறாரோ அதே தேதியில் தான் எங்களுடைய தேசிய தலைவர் படத்தை ரிலீஸ் செய்வோம். ரஞ்சித் பின்வாங்கி ஓடினாலும் நாங்கள் விடமாட்டோம் என்று தயாரிப்பாளர் சவுத்ரி தேவர் சவால் விட்டிருக்கிறார். ஏற்கனவே தயாரிப்பாளர் சௌத்ரி தேவர் அவர்கள் மாரி செல்வராஜை மாமன்னன் படத்தின் போது தாக்கி பேசி இருந்ததெல்லாம் வைரலாகி இருந்தது.

மாமன்னன் விவகாரம்:

மாமன்னன் படத்தில் வடிவேல் உடைய கதாபாத்திரம் அதிகளவில் பேசப்பட்டது. ஆனால், பகத் பாசில் உடைய ரத்தினவேல் கதாபாத்திரத்தை ஒரு ஜாதி, வெறி பிடித்த ஒரு மனிதன் போலவே காண்பித்து மக்களும் விமர்சனம் செய்திருந்தார்கள். ஆனால், அதை அப்படியே தலைகீழாக மாற்றி ரத்தினவேல் கதாபாத்திரத்தை மக்கள் கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் சவுத்ரி தேவர் செய்திருந்தார். ரத்தினவேல் தன்னுடைய தேவர் சமூகத்தை சேர்ந்தவர், ரத்தினவேல் தேவரை கொண்டாடுவோம் என்றெல்லாம் சவுத்ரி தேவர் செய்திருந்தார். மேலும், பிற சமூகத்தினர் மத்தியிலும் வரவேற்பு பெற்று இருக்கும் போது இரத்தினவேல் கவுண்டர், ரத்தனவேல் வன்னியர் என்று அவரவர் சமூகத்தினர் ரத்தினவேல் பெயருக்கு பின்னால் அவருடைய ஜாதி பெயரை குறிப்பிட்டு கொண்டாடியிருந்தார்கள்.

ரத்தினவேல் கதாபாத்திரம் குறித்து சொன்னது:

திரையரங்கில் வெளியான போது ரத்தினவேல் கதாபாத்திரம் விமர்சனம் செய்யப்பட்டாலும் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு ரத்தனவேல் கதாபாத்திரத்தை மக்கள் கொண்டாடி வரவேற்று இருந்தார்கள். அந்த அளவுக்கு வில்லனாக வடிவமைக்கப்பட்ட ரத்தினவேல் கதாபாத்திரத்தை மக்கள் கொண்டாடும் வகையில் ஹீரோவாக செய்தது சவுத்ரி தேவர் தான். இனி மாரி செல்வராஜ் படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தை கொண்டாடுவோம் என்றெல்லாம் சவுத்ரிதேவர் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த விவகாரத்திற்கு பிறகு தான் சவுத்ரி தேவர் கொங்கு பகுதி, வட மாவட்டம், தென் மாவட்ட பகுதிகளில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் அதிகமாக அறியப்பட்டிருந்தார். தற்போது இவர் பா ரஞ்சித் விஷயத்தில் படத்தின் விவகாரத்திலும் தலையிட்டு இருக்கிறார்.

Advertisement