காதல் விவகாரமா..? பிரபல பாடகர் சுட்டுக் கொலை..? குழப்பத்தில் போலீஸ்.? புகைப்படம் உள்ளே

0
503
singer-Navjot-Singh

பிரபல பஞ்சாப் பாடகரான நவ்ஜோத் சிங் என்பவர் கடந்த ஞாயிற்று கிழமை இரவு மர்மமான நபர்களால் துப்பாக்கியில் சுட்டு கொல்லப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொலைசெய்தவர் யார் என்று கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

navjot

22 வயதாகும் இந்த இளம் பாடகர் சண்டிகர் ஒட்டியுள்ள எஸ்.ஏ.எஸ் நகரில் ஒரு வாடகை குடியிருப்பில் தங்கி வந்திருந்துள்ளார். சமீபத்தில் வெளியில் சென்றுள்ள அவர், கடந்த ஞாயிற்று கிழமை (மே 27) ,தான் கொலைசெய்யப்படத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக தன்னுடைய அம்மாவிற்கு போன் செய்து நான் சொந்த ஊருக்கு செல்வதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை இரவு நவ்ஜோத் சிங்கின் உடல் தேரா பஸ்ஸி பகுதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. 5 துப்பாக்கி குண்டுகள் அவரது உடலில் பாய்ந்த நிலையில் அவர் இறந்து கிடந்தார். அவர் ஓட்டிச்சென்ற கார் அவர் உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி நின்றுகொண்டிருந்தது.

navjot-singh

ஆனால் அவரிடம் இருந்த செல் போனோ, பணமோ இல்லை இதர பொருட்களோ திருடுபோகாத நிலையில் அவர் கொல்லப்பட்டுளளார். இதனால் அவரை பணத்திற்காக யாரும் கொள்ளவில்லை என்றும், அவரை பிடிக்காத சில நபர்கக்ள் தனிப்பட்ட விரோதம் காரணமாக கொன்றிருக்கலாம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

நவ்ஜோத் சிங் இறப்பதற்கு முன்பாக அவர் ஒரு பெண்ணுடன் ஒரு உணவகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததை தான் பார்த்ததாக அவருடைய உறவினர் ஒருவர் காவல் துறையிடம் கூறியுள்ளார். பின்னர் விசாரித்ததில் அது அவருடைய காதலி என்று தெரிவந்ததால், காவல் துறை அவரிடம் விசாரனை நடத்தி வருகிறது.