கிளாமர் உடை புகைப்படத்தை பகிர்ந்த பிரியாமணியிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட வக்கிர நபர் – செருப்படி பதில் கொடுத்த பிரியாமணி

0
1486
priyamani
- Advertisement -

தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை கேட்ட ரசிகர்களுக்கு நடிகை பிரியாமணி செருப்படி பதில் கொடுத்துள்ளார். திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் பிரியாமணி. தெலுங்கு திரையுலகில் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘எவரே அதகாடு’. இந்த படத்தினை இயக்குநர் பி. பானு ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக வல்லபா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ப்ரியாமணி நடித்திருந்தார். இது தான் நடிகை ப்ரியாமணி ஹீரோயினாக அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து ப்ரித்விராஜின் ‘சத்யம்’ என்ற மலையாள படத்தில் நடித்தார் ப்ரியாமணி. அதன் பிறகு தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை ப்ரியாமணி, அடுத்ததாக தமிழ் திரையுலகிலும் நுழையலாம் என முடிவெடுத்தார். 2004-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘கண்களால் கைது செய்’.இது தான் நடிகை ப்ரியாமணி தமிழ் சினிமாவில் என்ட்ரியான முதல் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர்பாரதிராஜா இயக்கியிருந்தார்.

இதையும் பாருங்க : அதை அவளால ஜீரணிக்க முடியல – பாடகி மதுரமல்லி திடீர் மரணம் குறித்து அவரது கணவர் வேதனை. (சர்ச்சையில் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி)

- Advertisement -

இதில் கதையின் நாயகனாக வசீகரன் என்பவர் நடித்திருந்தார். ‘கண்களால் கைது செய்’ படத்துக்கு பிறகு ‘அது ஒரு கனாக்காலம், மது, பருத்தி வீரன், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா’ என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார் ப்ரியாமணி.தெலுங்கு, மலையாளம், தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் ப்ரியாமணி. ஹிந்தி திரையுலகில் 2013-ஆம் ஆண்டு வெளி வந்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திலும் நடித்து இருந்தார்.

பிரியா மணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் பிரியா மணி கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த வக்கிர குணம் கொண்ட ரசிகர் ஒருவர், தயவு செய்து உங்கள் நிர்வாண புகைப்படத்தை பதிவிடுங்கள் என்று மிகவும் கொச்சையாக கேட்டிருந்தார். அதற்கு பிரியாமணி, முதலில் உன் அம்மா அல்லது தங்கச்சிய அப்படி போட சொல்லு அப்புறம் நான் அதை செய்கிறேன் என்று செருப்படி பதில் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement