சூப்பர் சிங்கர் வெற்றியாளரை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள். நடுவர் சொன்ன பதிலை பாருங்க.

0
221108
SUPER-SINGER
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளது. ஜூனியர் சீனியர் என்று பல்வேறு சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி மூலம் பல்வேறு நபர்கள் வெள்ளித்திரையில் அளித்து வருகின்றனர். திவாகர் தொடங்கி தற்போது செந்தில் கணேஷ் ராஜலட்சுமி வரை பல பெயரை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வெள்ளித்திரை வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்திருக்கிறது. சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் ஏழாவது பாகம்சமீபத்தில் நிறைவடைந்தது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட போட்டியாளர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்துள்ளார். உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், ஸ்வேதா மோகன் ஆகிய நான்கு பேரும் நடுவர்களாக இருந்து வழிநடத்தும் இந்த நிகழ்ச்சியை, மா.கா.பா.ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு அனிருத் இசையமைப்பில் பாட வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

இதையும் பாருங்க : திருமணமான இரண்டே மாதத்தில் ஆல்யா-சஞ்சீவுக்கு நேர்ந்த சந்தோசம். என்ன தெரியுமா ?

- Advertisement -

பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் இறுதி போட்டிக்கு கௌதம், புண்யா, விக்ரம், முருகன், சாம் விஷால் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்த இந்த சீஸனின் இறுதி போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) கோலாகலாமாக நடைபெற்றது. மேலும், இந்த இறுதி போட்டிக்கு பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளர் முகென் கூட சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

இந்த சீசனனின் மூன்றாவது இடத்தை சாம் விஷால் மற்றும் புண்யா பிடித்தனர். மேலும், சூப்பர் சிங்கர் பட்டத்தை வெல்லும் நபர்களுக்கு தான் அனிருத் இசையில் பாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், மூன்றாம் இடத்தை பிடித்த சாம் விஷால் மற்றும் புண்யா இருவருக்கும் தனது படத்தில் பாடும் வாய்ப்பினை தரபோவதாக அனிருத் மேடையில் திடீரெண்று அறிவித்து அனைவரையும் ஷாக்கில் ஆழ்த்தினார்.

மேலும், இரண்டாம் இடத்தை விக்ரம் பிடித்திருந்தார். அவருக்கு 25 லட்ச ருபாய் மதிப்பிலான வைர நெக்லெஸ் வழங்கப்பட்டது. யார் இந்த சீஸனின் வெற்றியாளர் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்த நிலையில் முருகன் சூப்பர் சிங்கர் சீசன் 7 ன் பட்டத்தை வென்றார். அவருக்கு 50 லட்ச ரூபாய் பதிப்பிலான வீடும் வழங்கப்பட்டது. ஆனால், வழக்கம் போல இந்த சீசனிலும் எதிர்பார்த்த போட்டியாளர் வெற்றி பெறவில்லை என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

https://www.instagram.com/p/B4sN4NkBypE/

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ,முற்றிலும் ஏமாற்று சேனல் வெற்றி பெறுவதற்கான தகுதியான போட்டியாளர் புண்யா தான். மேலும், விக்ரம் மற்றும் சாம் கூட தகுதியான போட்டியாளர்கள் தான். ஒருபோதும் தகுதியான போட்டியாளர்கள் வெற்றி பெறுவது கிடையாது. அதற்கு மாறாக சோகமான பின்னணியை கொண்ட போட்டியாளர்களை வெற்றி பெறச் செய்வார் இந்த முறையும் இதுதான் நடக்கிறது. சூப்பர் சிங்கர் சிங்கர் ஒரு பிராடு என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த இருந்த சூப்பர் சிங்கர் தமில் நடு வரும் பிரபல பாடகர் பென்னி தயால் மிகவும் அருமை நீங்கள் நடுவராக இருந்து இருக்கலாம் என்று நக்கலாக பதிவிட்டுள்ளார்.

Advertisement