தமிழ் சினிமா திரைப்படங்களுக்கு நிகராக தற்போது தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. அது மட்டும் இல்லாமல் சினிமா துறையில் உள்ள நடிகர் நடிகைகளின் புகழுக்கு ஏற்றவாறு சீரியல் நடிகர்களும் மக்கள் மனதில் அதிக இடம் பிடித்துள்ளனர். சில காலமாகவே மக்கள் தியேட்டருக்கு சென்று படங்கள் பார்க்கும் ஆர்வம் காட்டுவதை விட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பதில் தான் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். அதிலேயேயும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் விஜய் டிவியில் பல பிரபலமான சீரியல்கள் ஒளிபரப்பாகின.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னால் முடிவடைந்த ராஜாராணி சீரியல் இளைஞர்களிடமும், பல குடும்பங்களின் மனதில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. ராஜா ராணி சீரியலில் சின்னையாவாக சஞ்சீவும் , செம்பாவாக ஆலியா மானசாவும் நடித்து வந்தார்கள். இவர்களுடன் பல நடிகர்களும் நடித்து வெற்றிகரமாக பல வருடங்களை கடந்து ஓடிய இந்த சீரியல் சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது.இதனால் பல பேர் வருத்தத்தில் ஆழ்ந்தனர். இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது.கடந்த சில மாதங்களுக்கு முன் அவர்களுக்கு பகிரங்கமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விஜய் டிவியிலும் இதுகுறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தார்கள்.
இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தபின் கல்யாணம் குறித்து எந்த தேதியும் அறிவிக்கவில்லை. சீரியல் முடிவதற்குள் இருவருக்கும் கல்யாணம் நடந்து முடிந்து விடும் என்று இணையங்களில் ஒரு சிலரால் பேசப்பட்டது. மேலும் ராஜா-ராணி-சீரியல் முடிந்தவுடன் இவர்களிருவரும் வெளியூருக்கு டூர் சென்று இருந்தனர், அங்கு ஆலியா மானசா, சஞ்சீவ் இருவரும் யாரிடமும் தெரியப்படுத்தாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்கள் என்று சீரியல் நடிகருமான,ஆர் ஜேவுமான சரவணன் மீனாட்சி செந்தில் கூறினார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே பல கேள்விகள் எழுப்பின.
இதற்கு செந்தில்,அட ஆமாம், அவங்க 2 பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு என்று புகைப்படம் போட்டு வாழ்த்தை சமூகவலைத்தளங்களில் தெரிவித்திருந்தார் .மேலும் கூடிய விரைவில் அனைவருக்கும் தெரியவரும் என்றும்குறிப்பிட்டிருந்தார் . சீரியல் நடித்த சிலநாட்களிலேயே மக்களின் மனதில் அதிக இடம்பிடித்தவர் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இவர்களின் திருமணம் குறித்த தகவல்கள் மக்களிடையே பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆல்யா மானசசா மற்றும் சஞ்சீவ் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே ஆல்யா மானஸா புத்திகாக வீடு ஒன்றை காட்டியுள்ளார். சமீபத்தில் இந்த வீட்டில் கிரக பிரவேசமும் நடைபெற்றது. இதனை சஞ்சீவ் தனது சமூக வலைதளத்தலில் பதிவிட்டுள்ளார்.