தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார். இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்து உள்ளார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
நடிகை மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். இவர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்தார். திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என்று தற்போதும் பிசியாக நடித்து வருகிறார் மீனா.
இதையும் பாருங்க : BB ஜோடியில் இருந்து விலகியதற்கு ரம்யா கிருஷ்ணன் காரணமா ? வனிதாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீனா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த மீனா தனது திருமண புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘ரொம்ப லேட்’ என்று வேடிக்கையாக பதில் கூறியுள்ளார்.
நீண்ட வருடங்களுக்கு பின்னர் தற்போது ரஜினிகாந்த்தின் ‘அண்ணாத்த ‘படத்தில் மீனா நடித்து வருகிறார். பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா, க்ரீத்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். ரூபன் எடிட்டராக பணியாற்றி உள்ளார். டி.இமான் அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.