‘டேய் சும்மார்ரா’ – தன் படத்தின் காட்சியை ரீ – கிரியேட் செய்த ரசிகர். எஸ் ஜே சூர்யாவின் ரியாக்ஷன்.

0
1139
sj
- Advertisement -

எஸ் ஜே சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் கடந்த மார்ச் 5 ஆம் தேதி வெளியாகிஇருந்தது. இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே பல்வேறு சிக்கலை சந்தித்து. எனை நோக்கி பாயும் தோட்ட படத்திற்காக எஸ்க்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் ரூபாய் 2 கோடியே 42 லட்சம் கடன் வாங்கியது. படத்தை வெளியிடுவதற்கு முன்னால் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் கடனை கொடுத்துவிட்டனர். மீதமுள்ள 1 கோடியே 24 லட்சம் தொகையை வட்டியுடன் செலுத்தும் வரை ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து, ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் சுமுக உடன்பாடு ஏற்படவே, நீதிமன்றத்தை நாடினார்கள். உடனடியாக ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது. இதனால் திட்டமிட்டபடி இன்று வெளியாகி இருக்கிறது. எஸ் ஜே சூர்யா, நந்திதா, ரெஜீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு செல்வ ராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் இசையமைத்துள்ளார்.

இதையும் பாருங்க : சன் மியூசிக் Vj தனுஜாவ ஞாபகம் இருக்கா ? உள்ளாடை தெரியும்படி படு கிளாமர் போட்டோ ஷூட்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ பழிவாங்கும் பேய் கதைகள் வந்திருக்கிறது. அதே ஒன் லைனை தான் இயக்குனர் செல்வராகவனும் இந்த படத்தில் கையில் எடுத்துள்ளார். இருப்பினும் தனது வித்யாசமான கதாபாத்திர வடிவமைப்பு, வித்யாசமான திரைக்கதை என்று இந்த படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பும் வசன உச்சரிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளுக்கு திரையரங்கில் கைத்தட்டல் பறந்தது. அந்த வகையில் எஸ் ஜே சூர்யா தனது நண்பருடன் பேசிகொண்டு இருக்கும் போது வேறு ஒருவர் முனகி கொண்டு இருக்க அவரிடம் ‘டேய் சும்மா இருடா’ என்ற வசனம் பல மீம்களாக கூட வெளியானது. இப்படி ஒரு நிலையில் இந்த காட்சியை ரசிகர் ஒருவர் ரி-கிரியேட் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.

-விளம்பரம்-
Advertisement