விஜய்க்கு அடுத்து இவரும் இளைய தளபதியா..!விஜய் ரசிகர்ள் ஏற்றுக் கொள்வார்களா..!

0
326
vijay

தமிழ் சினிமாவில் இருக்கும் ஓவ்வொறு முன்னணி நடிகர் துவங்கி கடைசி கட்ட நடிகர் வரை பட்ட பெயர் இல்லாத ஆலே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த வகையில் இளைய தளபதி என்ற பட்டதை ரசிகர்கள் மூலம் பெற்றவர் நடிகர் விஜய்.

udayanithi

ஆனால், நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினை இளைய தளபதி என்று புகழ்ந்து ஒரு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியுள்ளனர். திமுக கட்சியின் ஸ்டாளினுக்கு தான் தளபதி என்ற பெயரை வைத்து அழைத்து வந்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். திரைத்துறையில் தயாரிப்பாளராக அறிமுகமான இவர், தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக அரசியல் மேடைகளில் தென்படும் இவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடும் திராவிடத்தின் இளையதளபதி என்ற தலைப்பில் உதயநிதியின் சிறப்பை இன்று(நவம்பர் 27) மாலை முக்கிய செய்தி தொலைகாட்சியில் கதைகளின் கதை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதனை கண்ட விஜய் ரசிகர்கள் இளைய தளபதி என்றால் அது விஜய் மட்டும் தான் என்று சமூக வலைத்தளத்தில் வாதாடி வருகின்றனர்.