டாஸ்க்னா இப்படி இருக்கனும் சர்வைவரின் புதிய ப்ரோமோ – பிக் பாஸுக்கு அறிவுறுத்தும் நெட்டிசன்கள்.

0
4050
survivor
- Advertisement -

சமீபகாலமாகவே ஒவ்வொரு சேனலும் தங்களின் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமாக நிகழ்ச்சிகளைக் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறார்கள். ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சர்வைவர். நடிகர் அர்ஜுன் முதல் முறையாக தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

முதலில் இந்த நிகழ்ச்சியில் 16 பேர்கள் கலந்து கொண்டு காடர்கள், வேடர்கள் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு சவால்கள் தொடங்கின. பின் இந்த நிகழ்ச்சியில் இருந்து ஸ்ருஷ்டி முதலில் வெளியேறினார். பின் இரண்டாவதாக காடர்கள் அணியில் இருந்து இந்திரஜா எலிமினேஷன் ஆனார். இவர்களை தொடர்ந்து ராம், பார்வதி, பெசன்ட் ரவி ஆகியோர் வெளியேறினர்.

- Advertisement -

போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறியேறினாலும் இந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் நாக்கு தள்ள வைக்கிறது. சொல்லப்போனால் பெசன்ட் ரவி டாஸ்கில் தன்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை என்ற நிலையில் தான் வெளியேறினார். அதே போல கடந்த சில நாட்களாக இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.

அதிலும், இந்த நிகழ்ச்சி தொகுப்பாளரான அர்ஜுன், பாரபட்சம் பார்க்காமல் யாரவது தவறு செய்தால் வெளுத்து வாங்கி விடுகிறார். இதனாலேயே அர்ஜுனை, பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலுடன் ஒப்பிட்டு, நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழக்க வேண்டும் என்று அர்ஜுனிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-106.jpg

அதே போல சர்வைவரில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் உடலை வருத்தும் அளவிற்க்கு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கொடுக்கப்பட்ட டாஸ்கை பார்த்து ரசிகர்கள் வியந்து போய்யுள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் டாஸ்க் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இதை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி வருகின்றனர்.

Advertisement