‘ஷாட் கன்னில் ஸ்கோப்’ – கேலி செய்தவர்களுக்கு ஹாலிவுட் வரை தோண்டி பதில் கொடுத்த விஜய் ரசிகர்கள்.

0
3758

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கண்டது. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

This image has an empty alt attribute; its file name is 1-131.jpg

ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது.இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 21 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

- Advertisement -

இந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று ஆங்கில தலைப்பை வைத்துள்ளனர்.இதற்கு முன்னர் விஜய் லவ் டுடே, ஒன்ஸ்மோர், பிரண்ட்ஸ், யூத், மாஸ்டர் என ஐந்து நேரடி ஆங்கில தலைப்புகளில் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் ஷார்ட் கண்ணில் ஸ்கோப் பொறுத்தப்பட்டு இருப்பதை பலர் கேலி செய்து வருகின்றனர்.

ஆனால், ஷார்ட் கண்ணில் ஸ்கோப் பயன்படுத்தப்படும் ஆதாரங்களை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஹாலிவுட்டில் வெளியான ‘ஜுராசிக் வேர்ல்ட்’ படத்தில் வரும் ஹீரோவே ஷாட் கன்னில் ஸ்கோப் பயன்படுத்தி இருக்கிறார் என்று வேற லெவல் ஆதாரத்தை வெளியிட்டு இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

-விளம்பரம்-
Advertisement