அச்சு அசலாக தளபதி விஜய் – பூஜா ஹேக்டே போல நடனமாடிய அரபிக் குத்து பாடலை ரீ – கிரியேட் செய்த ரசிகர்.

0
311
arabic
- Advertisement -

அச்சு அசல் தளபதி விஜய், பூஜா ஹெக்டே போலவே நடனம் ஆடி அசத்தி இருக்கும் ரசிகர்களின் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் முடி சூடா மன்னனாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த படம் பேன் இந்திய படமாக வெளியாகி இருந்தது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருந்தார். படத்தில் ஒரு மால்-லை தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால்-லில் விஜய் சிக்கிக் கொள்கிறார்.

- Advertisement -

பீஸ்ட் படம்:

இறுதியில் விஜய், மால்-லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? என்பது தான் படத்தின் மீதி கதை. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்று கூறி இருக்கிறார்கள். அதோடு பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பீஸ்ட் படம் ஹிட்டானதோ? இல்லையோ? ஆனால், படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களுமே மிகப்பெரிய அளவில் வைரலானது. அதில், ஒன்று அரபிக்குத்து.

அரபிக்குத்து பாடல்:

இந்த பாடலுக்கு பூஜா ஹெக்டே, விஜய் இருவரும் இணைந்து நடனமாடி இருந்தார்கள். இந்த பாடல் அனிருத் இசையில் உருவாகி இருந்தது. உலகம் முழுவதும் இந்தப் பாடலானது பயங்கர வைரலாகி இருக்கிறது. அதோடு சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்கள். இந்த நிலையில் தற்போது இந்த பாடல் தொடர்பான வீடியோ ஒன்று
வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

ரசிகர்கள் ஆடிய அரபிக்குத்து:

அதாவது, இந்த அரபி குத்துப் பாடலில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் நடனமாடியது போலவே அச்சு அசல் அப்படியே ரசிகர்கள் நடனமாடி இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ தான் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் வாயடைத்துப்போய் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள். தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.

வாரிசு படம்:

இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். தற்போது அடுத்து கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது.

Advertisement