தனியார் பேருந்தில் பெண்கள் குறித்த மோசமான வாசகம். சின்மயின் கணவரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.

0
79078
chinmayi
- Advertisement -

கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் #metoo விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதிலும் பிரபல பின்னணி பாடகியான சின்மயி, தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தது ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் உலுக்கியது. இந்த குற்றச்சாட்டிற்கு பின்னர் தமிழ் சினிமாவில் பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சின்மயி, தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சர்ச்சைக்குரிய பாடகி என்ற அளவிற்கு வந்து விட்டார்.

-விளம்பரம்-

வைரமுத்து மீதான பாடகி சின்மயியின் முன்வைத்த பாலியல் புகார் தமிழ் சினிமாவையே உலுக்கியுள்ள நிலையில் பாடகி சின்மயி மீது சமூகவலைத்தளத்தில் பல்வேறு கருத்து தாக்குதலை முன்வைத்தனர். சின்மயிசொல்வது பொய் என்று ஒரு தரப்பும் கூறி வருகின்றனர். சின்மயி கூறுவது உண்மை என்றால் இப்போதே ஏன் சொல்லவில்லை என்று மற்றொரு தரப்பும் சின்மயியை வறுத்தெடுத்து வருகின்றனர். 

இதையும் பாருங்க : பிகில் படத்தின் தென்றல், விஜய்யின் தெறி படத்தில் இந்த காட்சியில் நடித்துள்ளாரா ? புகைப்படம் இதோ.

- Advertisement -

இருப்பினும் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து தனது சமூக வளைத்ததில் சின்மயி பதிவிட்டு வருகிறார். அதே போல பெண்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து சின்மயிடன் கூறி வருகின்றனர். அதை எல்லாம் கூட சின்மயி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் சின்மயி, தனியார் பேருந்து ஒன்றில்’பார்ப்பது கண்ணின் குற்றமில்லை, பார்க்க வைப்பது பெண்ணின் குற்றம்’ என்ற வாசம் எழுதபட்டிருந்ததை குறிப்பிட்டு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார்.

மேலும், இந்த பதிவில், கோயம்பத்தூர் 1c என்ற தனியார் பேருந்தில் பெண்களுக்கு இப்படி ஒரு கருத்து. எப்படி பெண்களை வெறுக்கும் நபர்கள் பெண்களை அசிங்க படுத்திக்கிறர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார் சின்மயி. சின்மயின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், சின்மயின் கணவரை கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். உண்ண எல்லாம் கல்யாணாம் பண்ண பாவத்துக்கு பாவம் அவர் கிட்ட தான்(சின்மயி கணவர்) பேசணும். போய் பாட்டு பாடி பொழைக்கிற வழிய பாரு போ கருத்து எல்லாம் யாரும் உன்கிட்ட கேட்கல என்றெல்லாம் கமன்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்றெல்லாம் பதிவிட துவங்கிவிட்டனர்.

-விளம்பரம்-

இத்தனை பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் சின்மயின் கணவர்தான் சமீபத்தில் ‘மன்மதுடு டூ’ 2 என்ற படத்தை எடுத்தார். அந்தப்படத்தில் முத்தக் காட்சிகள் புகைபிடிக்கும் காட்சிகள் இருந்ததால், பெண்கள் சுதந்திரம் எல்லாம் மற்றவர்களுக்கு மட்டும்தானா அது உங்கள் கணவருக்கு இல்லையா என்று நெட்டிசன்கள் சின்மயை வறுத்து எடுத்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement