இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் ஏன் வாய்ப்பு கொடுத்தீங்க – ஜான் விஜய்யால் சர்ச்சையில் சிக்கிய ரஞ்சித். என்ன காரணம் தெரியுமா?

0
89042
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேற்று அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

-விளம்பரம்-
Image

இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. அந்த வகையில் டாடி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் விஜய் கதாபாத்திரமும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இதையும் பாருங்க : வலிமை படத்தில் நடித்துள்ள இந்த நடிகை யார் தெரியுமா? 90ஸ் கிட்ஸ்க்கு நல்லா தெரியுமே.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகர் ஜான் விஜய்க்கு இந்த படத்தில் இயக்குனர் ரஞ்சித் எப்படி வாய்ப்பு கொடுத்தார் என்று நெட்சன்கள் கேள்வி எழுப்பி இருப்பதால் சர்ச்சையிலும் தலை வலியிலும் சிக்கியுள்ளார் ரஞ்சித். அதற்கு முக்கிய காரணமேட பிரபல தொகுப்பாளினி ஸ்ரீ ரஞ்சினி, நடிகர் ஜான் விஜய் மீது மீடூ புகார் எழுப்பி இருந்தது தான்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல விஜய் டிவி தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான ஸ்ரீரஞ்சனி, ஜான் விஜய் மீது மீடூ புகார் அளித்து இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில் ஒருமுறை நான் ஜான் விஜய்யிடம் பேட்டி எடுத்தேன். அதன் பின்பு நடு இரவில் எனக்கு போன் செய்து அந்த நிகழ்ச்சி எப்போது வெளியாகும் என்று கேட்டார்.

-விளம்பரம்-

அதற்கு நான் காலையில் இதுகுறித்து பேசலாம் என்றதற்கு ஜான் விஜய் என்னிடம் தவறாக பேசி என்னை செக்ஸ் உரையாடலுக்கு உடன்பட வற்புறுத்தினர்.நான் அவரை எச்சரித்ததும் பின்னர் அவர் பேச்சை மாற்றினார். அவர் பல பெண்களிடம் தப்பாக நடந்துள்ளார். காலா படத்தின் படப்பிடிப்பின் போதும் அவரிடம் செல்பி எடுக்கவரும் பெண்களை முத்தம் கொடுக்க சொல்லி புகைப்படம் எடுத்துக்கொள்வார்.

அவர் மிகவும் மோசமானவர் என்று கூறி இருந்தார். இந்த பிரச்சனை நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது சார்பட்டா பரம்பரை படத்தில் அவர் நடித்துள்ளதால் மீண்டும் சர்ச்சையாகி இருக்கிறது. மேலும், ஒரு பெண்ணிற்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த ஒரு நபருக்கு ரஞ்சித் எப்படி வாய்ப்பு கொடுக்கலாம் என்று ட்விட்டரில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement