டான்ஸ் மாஸ்டர் கூட step miss பண்ணலாம் ஆனா இந்த மனுஷன் – விஜய்யை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்.

0
303
- Advertisement -

டான்ஸ் மாஸ்டரே ஸ்டெப்பை மறந்தும் தளபதி விஜய் சும்மா மிரள வைத்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கிறது. இதனால் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும், இவருடைய படம் வந்தாலே போதும் திரையரங்களில் திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இருந்தாலும் படத்தின் வசூல் கோடிகளை குவித்து இருந்தது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

வாரிசு படம்:

தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

வாரிசு படம் பற்றிய தகவல்:

இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு வாரிசு என பெயர் இடப்பட்டு உள்ளது. தற்போது விஜய் அவர்கள் படத்தில் மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

ஜாலியோ ஜிம்கானா பாடல் வீடியோ:

இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாடல் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, விஜய் ஒரு மிகச் சிறந்த டான்ஸர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அவருடைய நடன வேகத்திற்கும், ஸ்டைலுக்கும் ஈடுகொடுத்து யாராலும் ஆட முடியாது. அந்த வகையில் பீஸ்ட் படத்தில் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ஜானி ஸ்டெப் சொல்லிக் கொடுத்து இருந்தார்.

வைரலாகும் விஜய்யின் நடன வீடியோ:

பின் ஜானி, விஜய் இருவருமே சேர்ந்து அந்த பாடலுக்கு ஆடியிருந்தார்கள். அப்போது திடீரென்று டான்ஸ் மாஸ்டர் ஜானிக்கு ஸ்டெப் மறந்துவிட்டது. இருந்தாலும், விஜய் விடாமல் நடனம் ஆடி இருந்தார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை பதிவிட்டு, டான்ஸ் மாஸ்டருக்கே ஸ்டெப் மறந்து போச்சு, ஆனால் எங்க தலைவர் எப்படி பின்னுறாரு என்று கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement