விஷ்ணு விஷாலின் சூப்பர் ஹிட் பட ரீ – மேக்கில் அக்ஷய் – இந்திகாரங்களே வேணாம்னு காதற்றாங்க.

0
2738
akshay
- Advertisement -

சமீப காலமாக தமிழ் வெளியான பல படங்கள் இந்தியிலும் ரீ மேக் செய்யப்பட்டு வருகிறது. சூர்யா நடித்த கஜனி படம் துவங்கி சிங்கம், சிறுத்தை வரை இந்தியில் ரீ மேக் செய்யபட்டுள்ளது. அந்த வகையில் தமிழில் பேய்களை வைத்து பல பாகங்களாக வந்த ‘ காஞ்சனா 2 ‘ திரைப்படம் இந்தியில் ரீ – மேக் செய்யப்பட்டது. ராகவா லாரன்ஸ் இயக்கிய முனியில் ஆரமித்து காஞ்சனா-2 வரை அனைத்து பாகங்களுமே ஹிட் ஆனா நிலையில் இந்த படத்தை இந்தியிலும் ரீ – மேக் செய்தார் லாரன்ஸ்.

-விளம்பரம்-

கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்த படத்தில் சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில் அமிதாப் பச்சன் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்து இருந்தார். இந்த படம் கொரோனா பிரச்சனை காரணமாக ott யில் வெளியானது. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. மேலும், அக்ஷய் குமாரை பலரும் கலாய்த்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தனது அடுத்த தமிழ் படத்தின் ரீ – மேக்கிற்கு தயாராகி விட்டார் அக்ஷய் குமார். இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணுவிஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “ராட்சசன்”. இந்த திரைப்படத்தில் நடிகை அமலாபால், ராதாரவி, காளி வெங்கட், ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூட கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீ-மேக்கில் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் பலரும் இந்த படத்தை இந்தியில் எடுக்க வேண்டாம் என்று கதறி வருகின்றனர்.

-விளம்பரம்-

அதிலும் ரசிகர் ஒருவர், நான் வட இந்தியாவை சேர்ந்தவர். இந்த பணம் படைத்த அரக்கன் தமிழ் சினிமாவில் இருக்கும் அணைத்து சிறந்த படங்களையும் கெடுக்கப் போகிறான். ராட்சசன் தமிழ் சினிமாவில் இருந்து வந்த ஒரு சிறந்த படம், இந்த படத்தின் உரிமையை தயாரிப்பாளர் விற்றது மிகவும் கேவலம் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement