சந்தோஷ் நாராயணனுடன் என்ன பிரச்சனை ? – முதல் முறையாக மனம் திறந்த பா ரஞ்சித்.

0
391
ranjith
- Advertisement -

பா ரஞ்சித்- சந்தோஷ் நாராயணன் கூட்டணி இடையே நடந்திருக்கும் பிரச்சனை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சார்பட்டா பரம்பரை படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். தற்போது இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி உள்ளார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்து உள்ளார்.

- Advertisement -

பா ரஞ்சித் திரைப்பயணம்:

அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீசுக்காக கதாநாயகியாக அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இப்படி பா. ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி முதல் சார்பட்டா பரம்பரை படம் வரை இணைந்து பணியாற்றியவர் சந்தோஷ் நாராயணன். ஆனால், கடைசியாக பா. ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்திலும் சந்தோஷ் நாராயணன் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பா. ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் இருவரும் நெருங்கிய நண்பர்களாக தமிழ் சினிமாவையே கலக்கி கொண்டிருந்தார்கள்.

சந்தோஷ் நாராயணன்- பா ரஞ்சித் கூட்டணி :

பின் இருவரும் இலேசான மனஸ்தாபம் காரணமாக ஒரு படத்தில் மட்டும் பிரிந்து இருந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து இனி பணியாற்றிய வாய்ப்பில்லை என தெரிவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அப்படி இருவருக்கும் இடையே என்ன தான் பிரச்சினை? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தெருக்குரல் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனின் மகள் பாடகி தீ பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் உலகளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

-விளம்பரம்-

சந்தோஷ் நாராயணன்- பா ரஞ்சித் கூட்டணி விரிசல்:

ரோலிங்ஸ்டோன் எனும் பிரபலமான மேகஸினில் பாடகி தீ மற்றும் ஹாலிவுட் ராப் சிங்கர் ஒருவரது புகைப்படம் மட்டுமே இடம் பெற்றது. ஆனால், தெருக்குரல் அறிவு படம் ஏன் இடம்பெறவில்லை என்றும், சந்தோஷ் நாராயணன் இதற்கு ஏன் குரல்கொடுக்கவில்லை என பா ரஞ்சித் கோபித்துக் கொண்டு தான் இருவருக்கும் இடையே இப்படியொரு விரிசல் ஏற்பட காரணம் என கூறப்படுகிறது. தற்போது பா ரஞ்சித் தயாரித்து இயக்கி தற்போது பா ரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு இளையராஜா இசையமைக்கப் போகிறார் என்று முதலில் தகவல் வெளியானது.

சியான் 61 படத்தின் இசையமைப்பாளர்:

ஆனால், டென்மா எனும் இசையமைப்பாளர் தான் அந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்நிலையில் சியான் 61 படத்திற்கு சந்தோஷ் நாராயணன்- பா ரஞ்சித் கூட்டணி இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இது மட்டும் தான் பிரச்சனையா? அல்லது வேறு ஏதாவது தொழில் ரீதியான கருத்து மோதல்கள் காரணமாக என ஏகப்பட்ட விவாதங்கள் கிளம்பி வருகின்றன.

பா ரஞ்சித் விளக்கம் :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பா ரஞ்சித்பேசுகையில் ‘சந்தோஷ் நாராயணனுடன் 5 படங்களில் பணியாற்றி இருக்கிறேன். வேறு கலைஞர்களுடன் வேலையை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. இது இரண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவுதான். ஆனால், இனிமேல் சேர்ந்து வேலை பார்க்கவே மாட்டோம் என்றும் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு சண்டை போடவில்லை. மீண்டும் நான் எப்போது அழைத்தாலும் அவர் வந்துவிடுவார் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement