ஜெய் பீம் படத்திற்கு இதனால் தான் தேசிய விருது கிடைக்கவில்லையா ? ஆதங்கத்தை கொட்டி வரும் நெட்டிசன்கள்.

0
1696
Jaibhim
- Advertisement -

ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வேதனையுடன் பதிவிட்டு வரும் கமெண்ட் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 69 ஆவது வருட தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் வியாழக்கிழமை மாலை அறிவிக்கப்படுகின்றது. இதில் சிறந்த நடிகர், நடிகை, சிறந்த திரைப்படம் என பல பிரிவுகளில் விருது வாங்கும் வெற்றியாளர்கள் குறித்து பிரஸ்மீட்டில் அறிவித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

அதில் சிறந்த நடிகருக்கான விருதை புஷ்பா படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் வாங்கி இருக்கிறார். சிறந்த நடிகைக்கான விருதை கங்குபாய் கதியாவாடி படத்தில் நடித்த நடிகை அலியா பட்டும், மிமி படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சனோன் ஆகியோருக்கும் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. பின் சிறந்த இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத்திற்கு வழங்கப்படுகிறது. புஷ்பா படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

- Advertisement -

69 தேசிய விருது:

சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை விவசாயி படம் வென்று இருக்கிறது. இந்த படத்தை மணிகண்டன் இயக்கி இருக்கின்றார். இவர் ஏற்கனவே காக்கா முட்டை படத்திற்காக தேசிய விருது வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் ரசிகர்கள் பெரிதும் எரிப்பார்க்கப்பட்ட ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை, கர்ணன் ஆகிய படங்களுக்கு விருது எதுவும் கிடைக்கவில்லை. குறிப்பாக, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட ஜெய் பீம் படத்திற்கு விருது கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தேசிய விருது வாங்கிய பிரபலங்கள்:

அது மட்டும் இல்லாமல் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த லிஜோ மோலிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு சூறரை போற்று படத்திற்காக சூர்யா தேசிய விருதை வாங்கி இருந்தது போல் இந்த ஆண்டும் வாங்குவார் என்று ரசிகர்கள் கூறியிருந்தார்கள். ஆனால், ஜெய் பீம் படத்திற்கு எந்த ஒரு பிரிவிலும் விருது கிடைக்காதது குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வருத்தத்துடன் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

ரசிகர்கள் வருத்தம்:

அதில் சிலர், ஜெய் பீம் படம் விருது குழுவால் எந்த ஒரு பிரிவிலும் விருது ஏற்கப்படாதது ரசிகர்களாகிய எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. தேசிய விருது இல்லை என்றால் என்ன? எங்கள் இதயத்தில் இந்த படம் எப்போதும் இருக்கும். லிஜோ மோலின் புகைப்படத்தை பதிவிட்டு இவர் தான் சிறந்த நடிகை. எந்த பிரிவிலும் இந்த படம் தேர்வாகவில்லையா? பரவாயில்லை. இந்த படம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அதையெல்லாம் விட பெரியது என்று கூறியிருக்கிறார்கள்.

ஜெய்பீம் படம்:

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ஜெய் பீம். இந்த படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. மேலும்,பி Ottயில் வெளியானதால் இந்த படத்திற்கு விருது கிடைக்கவில்லை என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால், சூர்யாவிற்கு தேசிய விருதை பெற்றுத்தந்த சூரரை போற்று படம் கூட Ottயில் தான் வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement