நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் சினிமா உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார்.சில ஆண்டுகளாக உடல் நல குறைவின் காரணமாக அவஸ்தை பட்டு வருகிறார். இவருக்கு தொடர்ந்து சிகிச்சையும் கொடுக்கப்பட்டு தான் வருகிறது.
மேலும், இவர் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கட்சியை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நேற்று பத்திரையாளர் சந்திப்பில் பேசிய விஜயபிரபாகரன்’ கேப்டன் விஜயகாந்தின் உடல்நலத்தில் சற்று பின்னடைவு தான், ஆனால் கேப்டன் விஜயகாந்த் 100 வருடம் நல்லா இருப்பார், அவர் பழையபடி பேசுவார், எழுந்து வருவார் அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம். உங்களை மாதிரியே நாங்களும் நம்புகிறோம். இப்போது வரைக்கும் கேப்டன் நலமாக தான் இருக்கிறார்’ என்று கூறி இருந்தார்.
விஜய பிரபாகரன் பதிவு:
இதனால் பலருமே விஜயகாந்தின் உடல் நிலை பின்னடைவு என்ற தலைப்பில் பலர் செய்திகளை வெளியிட ஆரம்பித்தனர். இதனால் இது தொடர்பாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், கேப்டனுடைய உடல்நிலை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம். வழக்கம் போல் ஊடகங்கள் தவறான தலைப்பில் தான் செய்திகளை கொண்டு வருகிறது. கட்சியினர், ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். வழக்கம்போல் ஆகஸ்ட் 25ஆம் தேதி கேப்டன் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக கொண்டாடலாம் என்று கூறி இருந்தார்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜய்காந்த் தொண்டர்கள் முன்னிலையில் பிறந்த நாள் கொண்டாட்டம்.#HBDVijayakanth #Vijayakanth #DMDK pic.twitter.com/k45jJvQldm
— Kᴀʙᴇᴇʀ – ஆட்டோ கபீர் (@Autokabeer) August 25, 2023
கேப்டனின் பதிவு :
இந்நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த், தன்னுடைய உடல்நலம் குறித்த வந்ததிகளை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். தான் நலமுடன் இருப்பதாகவும் கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் தனது பிறந்தநாளான நாளை காலை 10 மணிக்கு கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் நேரில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.
பரிசுகளோடு வந்த தொண்டர்கள் :
இதனை தொடர்ந்து தான் சொன்னபடியே இன்று காலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் தன் கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்களைச் சந்தித்தார். அவரைக் காண காத்துக் கொண்டிருந்த பல்வேறு தொண்டர்களும் ரசிகர்களும் அவரை கண்டதும் ‘கேப்டன்,கேப்டன்’ என்று உற்சாகமடைந்து கோஷமிட்டனர். மேலும், அங்கே வந்த சிலர் கேப்டனுக்காக பிறந்தநாள் பரிசுகளை கூட கொண்டு வந்தார்கள்.
பிரேமலதா பேச்சு :
ரசிகர்களை பார்த்து விஜயகாந்தும் தனது இரு கையை தூக்கி காட்டினார். மேலும், அங்கே இருந்தவர்கள் சிலர் எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிவிட்டாரே என்று கண்ணீர் கூட வடித்தனர். இதனை தொடர்ந்து பேசிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ‘தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். நலமாக இருக்கிறார். விஜயகாந்த் நீண்டகாலம் இருப்பார். நமது முரசு, நாளைய தமிழக அரசு’ என்று கூறி இருந்தார்.