ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரியில் நடந்திருக்கும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். கிட்டத்தட்ட இவர் சினிமா உலகில் இசையமைப்பாளராக நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.
It was worst concert ever in the History #ARRahman #Scam2023 by #ACTC. Respect Humanity. 30 Years of the Fan in me died today Mr. #ARRAHMAN. #MarakkumaNenjam Marakkavey Mudiyathu, . A performer in the stage can’t never see what’s happening at other areas just watch it. pic.twitter.com/AkDqrlNrLD
— Navaneeth Nagarajan (@NavzTweet) September 10, 2023
மேலும், இவர் சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் புகழ் பெற்றவர். தற்போது இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம், அயலான், ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம் போன்ற பல படங்களில் நடிக்கும் பிசியாக இசை அமைத்து வருகிறார். மேலும், இவர் படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரி:
அதோடு இவர் நிகழ்ச்சி என்றாலே டிக்கெட் சில நிமிடங்களில் விற்பனையாகி விடும். இது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் `ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெற திட்டமிட்டு இருக்கிறார்கள். அதோடு வெளிநாடுகளிலும் இந்த இசை கச்சேரி நடக்க இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
2 நிமிடத்தில் என் பையன் உயிர் போயிருக்கும்… ARR இதற்கு பதில் சொல்லியே ஆகணும்… ஏமாற்றத்தில் ரசிகர்கள்!#arrahman | #isaipuyal | #marakkumanenjam | #panaiyur | #kanchipuram | #chennai | #NewsTamil24x7 pic.twitter.com/oMOetZHuLv
— News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) September 10, 2023
மேலும், சென்னை பனையூரில் ஏ ஆர் ரகுமான் இசைக் கச்சேரி நடக்க இருந்தது ஆனால், திடீர் மழை பெய்து நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் நீர் தேங்கி இருக்கிறது. இதனால் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் சோகத்தில் இருந்தார்கள். மேலும், இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மானும் சமூக வலைத்தளங்களில் மன்னிக்கவும் கேட்டிருந்தார். தற்போது அந்த இசை கச்சேரி நேற்று நடைபெற்றது.
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டனர். டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், 10000 ரூபாய் டிக்கெட் வாங்கி தங்களால் உள்ளே கூட செல்லவில்லை என்று புலம்பி இருக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட கோயம்பத்தூரில் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரசிகர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டிருந்தார்கள்.5000 ரூபாய் கொடுத்து நிகழ்ச்சி பார்க்க வந்தவர்களுக்கு ஒரு சேர் கூட இல்லை, மிகவும் மோசமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என்று நிகழ்ச்சிக்கு சென்ற பலர் புலம்பி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.