சர்ச்சை இல்லாத கதைக்களம் தான்,ஆனாலும் – ஐஸ்வர்யா ராஜேஷினின் ஃபர்ஹானா விமர்சனம்

0
1717
Farhana
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தற்போது இவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஃபர்ஹானா. இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கிறார். எஸ்.ஆர். பிரபு இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அனுமோல், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், கிட்டி, குக் வித் கோமாளி சக்தி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இஸ்லாமிய பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பல எதிர்ப்புகளுக்கு மீறி இன்று வெளியாகி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மதக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் இஸ்லாமிய குடும்பத்தில் இருக்கிறார். இவருடைய கணவர் படிக்காதவர். இவர் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என நினைக்கும் மனநிலையை உடையவர். ஆனால், குழந்தைகளை எப்படியாவது படித்து நல்ல வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், தன்னைப் போல தன் குழந்தைகளும் கஷ்டப்படக் கூடாது என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நினைக்கிறார்.

- Advertisement -

இன்னொரு பக்கம் இவர்களுடைய குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறார்கள். இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் வேலைக்கு போக முடிவு எடுக்கிறார். பின் அவர் கணவனின் அனுமதி உடன் தன்னுடைய தோழியின் உதவி மூலம் தனியார் வங்கியில் கால் சென்டரில் வேலைக்கு செல்கிறார். அதனால் அந்த குடும்பம் வறுமையின் பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுகிறது. ஒரு கட்டத்தில் தன் தோழிகளைப் போல அதிக சம்பளம் கிடைக்கும் வேறொரு பிரிவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மாறுகிறார்.

ஆனால், அங்கு அவருக்கென்று ஒரு பெரிய பிரச்சினை காத்திருக்கிறது .அதில் இருந்து அவர் எப்படி வெளி வருகிறார்? பிரச்சனையை ஐஸ்வர்யா ராஜேஷ் கணவர் எப்படி கையாண்டார்? கடைசியில் இவருடைய வேலைக்கு ஏதாவது பிரச்சனை வந்ததா? என்பதே படத்தின் மீதி கதை. மதக்கட்டுப்பாட்டுகளுடன் தந்தை, கணவன், குடும்பம் என்று வாழும் ஒரு இஸ்லாமிய பெண்ணின் எதார்த்தமான கதையை மையமாக வைத்து இயக்குனர் படத்தை எடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஃபர்ஹானா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பெண்களுடைய மனநிலை, எதிர்பார்ப்பு, நியாயமான ஏக்கம் போன்ற பலவற்றையும் அவர் அழகாக சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்திய கதையாக நகர்கிறது. ஒரு கட்டத்தில் இந்த கதையை கிரைம் திரில்லாக இயக்குனர் கையாண்டு விதம் சிறப்பு. இருந்தாலும் சில காட்சிகளை இயக்குனர் விறுவிறுப்பாக காண்பித்திருக்கலாம்.

படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இஸ்லாமிய பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். இந்த படம் ஐஸ்வர்யா ஐஸ்வர்யா ராஜேஷ் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருடைய கணவராக ஜித்தன் ரமேஷ் நடித்திருக்கிறார். அவரும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். படத்தில் நடிகர்களை தவிர தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. இருந்தாலும், படத்தில் சின்ன சின்ன குறைகள் இருக்கிறது. அந்த வகையில் கால் சென்டர் இடத்தை படத்தில் அதிகமாக காண்பித்து இருக்கிறார்கள். இதை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். அதேபோல் கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் முழுமை அடையாதது போல இருக்கிறது. ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் நடிப்பு சிறப்பு

ஒளிப்பதிவு பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலத்தை சேர்த்திருக்கிறது

பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்திய கதை

கதைக்களம் இயக்குனர் கொண்டு சென்ற விதம் சிறப்பு

குறை:

படம் முழுவதும் கால் சென்டர் இட காட்சிகளை காண்பித்து இருக்கிறார்கள்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

கதை களத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக காண்பித்திருந்தால் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும்

மொத்தத்தில் ஃபர்ஹானா தி கேரளா ஸ்டோரி போல சர்ச்சையில் சிக்காத கதை தான் என்றாலும் சாதிக்க தவறிவிட்டது.

Advertisement