சீரியலில் இருந்து விலகியது குறித்து இன்ஸ்டாவில் பரீனா போட்ட பதிவு – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
505
farina
- Advertisement -

மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. சீரியல் என்றாலே ஹீரோ, ஹீரோயின்,வில்லி. சீரியலில் ஹீரோ- ஹீரோயினுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதே அளவுக்கு வில்லிக்கும் இருக்கிறது. ஹீரோ- ஹீரோயினுக்கு இணையாக வில்லி கதாபாத்திரம் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஹீரோயினை விட வில்லியின் இம்பாக்ட் தான் சீரியலில் பயங்கரமாக இருக்கும். அதிலும் சமீப காலமாக கதாநாயகிகளை விட வில்லிகள் தான் மக்கள் மத்தியில் அதிகம் இடம் படித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-241.jpg

அந்த வரிசையில் விஜய் டிவியில் மோசமான வில்லியாக திகழ்பவர்கள் ராஜா ராணி அர்ச்சனா, பாரதி கண்ணம்மா வெண்பா. இவர்களையெல்லாம் ரசிகர்கள் திட்டித்தீர்த்த நாளே இருக்கிறது. அந்த வகையில் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனாவை நிஜயத்திலும் பலர் வில்லியாகவே தான் பார்த்து வருகின்றனர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

குழந்தை பிறந்த பின் பரீனா :

இந்த நிலையில் பரீனா கர்ப்பமாக இருப்பதை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தார். இருப்பினும் குழந்தை பிறந்த சில மாதங்கள் வரையிலும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார்.கர்ப்பமாக இருந்த போது பல விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வந்தார் பரீனா. இதனால் இவர் மீது சமூக வலைதளத்தில் ஹேட்டர்ஸ்களால் பல விதமான நெகட்டிவ் கமன்ட்சுகள் கூட வந்தது.

கலர்ஸ் தமிழ் அபி டைலர் :

ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய கர்ப காலத்தை என்ஜாய் செய்யும் விதமாக பல விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வந்தார். அதிலும் குறிப்பாக நீருக்கு அடியில் இவர் நடத்திய போட்டோ ஷூட் பெரும் வைரலானது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த சில மாதங்களில் மீண்டும் சீரியலில் நடிக்க வந்துவிட்டார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-56.png

ஃபரீனாவிற்கு பதில் கீர்த்தி :

பாரதி கண்ணம்மா தொடரை போல குழந்தை பிறந்த பின்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அபி டைலர் தொடரிலும் பரீனா பவானி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் அபி டைலர் தொடரில் இருந்து பரீனா திடீரென்று மாற்றப்பட்டு இருக்கிறார். தற்போது பரீனா நடித்து வந்த பவானி வேடத்தில் நடிகை கீர்த்தி நடிக்க கமிட்டாகியுள்ளார். அவர் இதற்கு முன் விஜய்யில் ஒளிபரப்பான ராஜபார்வை தொடரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஃபரீனா சொன்ன காரணம் :

அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகளும் வெளியாகிஇருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த அறிவிப்பு வெளியான பின்னர் ஃபரீனா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ சில தவிர்க்க முடியாத காரணங்களால் பவானி கதாபாத்திரத்தில் என்னால் தொடர முடியவில்லை. வாய்ப்பளித்த புரொடக்‌ஷன் நிறுவனத்திற்கும், முழு ஒத்துழைப்பு கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி! எனத் தெரிவித்திருக்கிறார்.

Advertisement