தென்னிந்திய திரைப்படம் குறித்து பொறாமை பட்ட சல்மான் – ராக்கி பாய் ஸ்டைலில் பஞ்ச் பதிலை கொடுத்துள்ள யாஷ்.

0
405
yash
- Advertisement -

இந்திய அளவில் வெளியாகும் படங்கள் விற்பனை ரீதியாக பெரிய அளவில் சாதிக்கின்றன. பாகுபலி படத்தை தொடங்கி சமீபத்தில் வெளியான புஸ்பா படம் வரை மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதனால் இந்தி நடிகர்கள் இங்கு நடிப்பதும் தென்னிந்திய நடிகர்கள் இந்தி சினிமாக்களில் பணியாற்றுவதும் என சினிமா மார்க்கெட் விரிவடைந்து வருகிறது. அதே நேரத்தில் இரு தரப்பு சினிமா உலகில் சில உரசல்கள் நிகழ்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு பிரஸ்மீட்டில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

-விளம்பரம்-
salmankhan

அதில் அவர் ராம் சரணை வாழ்த்தி இருந்தார். பின் தென்னிந்திய படங்கள் இங்கு பாலிவுட்டில் ஓடுகின்றது. ஆனால், இந்தி படங்கள் அங்கு ஓடுவதில்லை என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் இதற்கு நடிகர் யாஷ் பதில் கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இதனை அப்படி பார்க்க வேண்டியதில்லை. எங்களது படங்களுக்கும் தகுந்த வரவேற்பறை பெறுவதில்லை. என்ன நடக்கிறது என்றால் இங்கு டப் செய்ய தொடங்கிவிடுகிறார்கள். நாங்கள் என்ன உருவாக்குகிறோமோ?

- Advertisement -

சினிமா டப் படங்கள் குறித்து யாஷ் அளித்த பேட்டி:

அதற்கு மக்கள் பழகிக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் மக்கள் டப் படங்களை ஜோக்காக நினைத்து கொள்கிறார்கள். அந்த நிலைமை டப்பிங்கினால் தான் உருவாகிறது. ஆகவே படங்களுக்கு முக்கிய இடம் கிடைப்பதில்லை. எங்களுடைய கதை சொல்லும் முறைக்கும் படத்திற்கும் முக்கியத்துவம் கிடைக்கிறதென்றால் அது ஓரிரவில் நடத்து விடுவதில்லை. அவர்களுக்கு எங்களது பாணி கன்டென்ட்கள் சென்று சேர்வதற்கு சில வருடங்கள் ஆகும்.

சல்மான் குறித்து யாஷ் கூறியது:

ஆகவே, பாகுபலி படம் எங்களுக்கு முன்னோடியாக அந்த ஸ்பேஸை உருவாக்கி வைத்திருந்தது. அதன் பிறகு KGF உருவாக்கியது. மேலும், நாங்கள் நிறைய இந்திப் படங்கள் பார்க்கிறோம். ஹிந்தி நட்சத்திரங்களை ரசிக்கிறோம். ஆனால், மார்க்கெட் ரீதியாக சல்மான் கான் சொல்வது சரியே. இன்னும் அதிகரிக்க வேண்டும். படம் வெளியாவதில் உள்ள மற்ற கோணங்களையும் பார்க்க வேண்டும். நல்ல தயாரிப்பு நிறுவனங்கள் இங்கு வர வேண்டும். நல்ல பொழுதுபோக்கு படங்கள் வெளியாகி மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும்.

-விளம்பரம்-

நடிகர் யாஷ் பற்றிய தகவல்:

அது கூடிய விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார் யாஷ். கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவர் ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இது ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

Latest Update About Kgf 2

கே ஜி எஃப் 2 படம் ரிலீஸ்:

மேலும், இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து தற்போது கே ஜி எஃப் 2 படம் உருவாகியுள்ளது. பீஸ்ட் படம் வெளியாகி ஒரு நாள் இடைவெளியில் அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி கேஜிஎப் 2 படம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தான் கே ஜி எஃப் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் ரிலிஸுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

Advertisement