ஹாலிவுட்டில் பாலியல் ஆபாச படங்களில் நடித்து பின்னர் திரைப்படங்களில் நடிகையாக மாறியவர் நடிகை சன்னி லியோன். தற்போது ஹிந்தி திரையுலகின் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு டேனியல் வெபர் என்ற கணவர் இருக்கிறார்.ஆபாச நடிகையாக இருந்தாலும் இவரை இந்திய ரசிகர்கள் நடிகையாக ஏற்றுக்கொண்டனர். திருமணம் ஆன பின்னர் இரண்டு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், தற்போது தமிழ், மலையாளம் என்று பல படங்களில் நடித்து வருகிறார்.
முன்னர் பார்ன் எனப்படும் நீலப்படங்களில் நடித்து வந்த அவர் பாலிவுட்டில் அறிமுகமாகி தற்போது அங்கு முன்னணி நடிகையாகவும் மாறிவிட்டார். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதன் பின்னர் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இவருக்கென்று பல ரசிகர்கள் இருக்கின்றனர்.
இதையும் பாருங்க : ஆபாச நடிகை சன்னி லியோன் படத்தின் கமிட் ஆன CWC நடிகை – இந்த டிக் டாக் பிரபலம் வேற இருக்காராம்,
இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது விலை நிலத்தை சுற்றி சன்னி லியோனின் ஆளுயர பேனரை வைத்துள்ள சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கினபல்லி சென்சு ரெட்டி என்ற விவசாயி தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் முட்டைகோஸ் காலிபிளவர் உள்பட பல பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்.
அவருடைய நிலத்தில் மற்ற நிலத்தில் விளையும் பயிர்களை விட மிக நன்றாக விளைச்சல் வருகிறது. இதனால் பலர் அவருடைய நிலத்தைப் பார்த்து பலர் கண் திருஷ்டி படக்கூடாது என்று நிலத்தைச் சுற்றி சன்னி லியோனின் பிகினி புகைப்படங்கள் அடங்கிய ஆளுயர பேனரை வைத்துள்ளார். அந்த வழியாக செல்லும் நபர்கள் யாரும் அவருடைய நிலத்தை பார்க்காமல் சன்னி லியோன் படத்தை பார்த்தே கடந்து சென்று விடுவார்கள் என்று தான் இப்படி செய்தாராம்.