16 வருஷம்தா நீ வாழ்வேன்னு தெரிஞ்சி இருந்தா – மகளின் இறப்பு குறித்து விஜய் ஆன்டனி மனைவி உருக்கம்.

0
2864
- Advertisement -

தன்னுடைய மகளின் பிரிவு தாங்க முடியாமல் விஜய் ஆண்டனியின் மனைவி பதிவிட்டு இருக்கும் உருக்கமான பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இவர் முதலில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

-விளம்பரம்-
VijayAntony

பின் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்து இருக்கிறார். இதனிடையே கடந்த 2006ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை விஜய் ஆண்டனி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் விஜய் ஆண்டனியின் 16 வயது மூத்த மகள் மீரா. இவர் சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்து இருந்தார்.

- Advertisement -

விஜய் ஆண்டனி மகள் தற்கொலை:

இந்த நிலையில் கடந்த மாதம் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இருந்தார். இதை அந்த வீட்டின் பணியாளர் பார்த்து அலறி இருந்தார். இதன்பின் காவேரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு சொல்லப்பட்டாலும் சிறுமி மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தார்கள். மேலும், மீரா இறப்பு தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மீராவின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறியிருந்தார்கள்.

விஜய் ஆண்டனி அறிக்கை:

மீராவுடன் படித்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களும் மீராவின் நினைவுகளை பகிர்ந்து கண்ணீர் மல்க அழுது இருக்கிறார்கள். மேலும், தனது மகளின் இறப்பு குறித்து விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், அன்பு நெஞ்சங்களே என் மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத்தான் சென்று இருக்கிறாள்.

-விளம்பரம்-

பாத்திமா பதிவு:

என்னிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள் உங்கள் விஜய் ஆண்டனி’ என்று கூறி இருக்கிறார். இதற்கு பலரும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறி இருந்தார்கள். இந்த நிலையில் தன்னுடைய மகளின் பிரிவு குறித்து விஜய் ஆண்டனியின் மனைவியும் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

மகள் குறித்து சொன்னது:

அதில் அவர், எங்களுடன் நீ 16 வருடங்கள் மட்டுமே வாழ்வாய் என்று தெரிந்திருந்தால் உன்னை என் அருகில் மட்டும்தான் வைத்திருப்பேன். அந்த சூரியனையும் நிலவையும் கூட உனக்குக் காட்டியிருக்க மாட்டேன். நான் தினமும் உன் நினைவால் இறந்து கொண்டிருக்கிறேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை. அம்மா, அப்பாவிடம் திரும்பி வா. லாரா உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். லவ் யூ தங்கம்! என்று உருக்கமாக கூறி இருக்கிறார்.

Advertisement