-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

ஆந்திர அரசியலால் தொடர்ந்து அவமானப்படும் தனது மனைவிக்காக செல்வமணி எடுத்த அதிரடி முடிவு.

0
2395

தன்னுடைய மனைவி ரோஜாவுக்கு ஆதரவாக அரசியலில் இயக்குனர் ஆர் கே செல்வமணி களமிறங்கியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த “செம்பருத்தி” படத்தின் மூலம் தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார். மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு என்று பல நடிகர்களின் படங்களிலும் ரோஜா நடித்து இருந்தார். அதே போல இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா சின்னத்திரை நிகழ்ச்சிகள், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார்.

ரோஜா அரசியல்:

அதன் பின் சில ஆண்டு காலாகவே ரோஜா சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வருகிறார். அதோடு ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதில் ரோஜாவுக்கு பங்கு உண்டு. தற்போது ரோஜா அவர்கள் சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களாகவே ரோஜா குறித்த சர்ச்சை தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரோஜா குறித்த சர்ச்சை:

-விளம்பரம்-

குறிப்பாக, ரோஜா ஆபாச படத்தில் நடித்தார் என்று தெலுங்கு தேசம் கட்சியின் சட்டசபையில் அவருடைய சிடிகள் காட்டப்பட்டிருந்தது. இது குறித்து தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சரும், கட்சியின் முன்னாள் தலைவருமான பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி அவர்கள் ரோஜாவை குறித்து மிக மோசமாக பேசியிருந்தார். இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து நடிகை ரோஜா அவர்கள் தன்னுடைய வீட்டில் கண்ணீர் மல்க பேட்டி அளித்திருக்கிறார். இதனை அடுத்து நடிகை ரோஜாவை அவதூறாக பேசிய வழக்கில் பண்டாரு சத்தியநாராயண மூர்த்தியை கைது செய்திருக்கின்றனர்.

-விளம்பரம்-

ஆதரவு கொடுத்த ரோஜா கணவர்:

இதற்கு பலர் ரோஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ரோஜாவின் கணவர் ஆர்கே செல்வமணி அரசியலில் களம் இறங்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் ஆர் கே செல்வமணி. இவர் தன்னுடைய மனைவி ரோஜாவின் அரசியல் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் தான் இதனால் வரை அரசியலில் நேரடியாக தலையிடாமல் இருந்தார்.

அரசியலில் இறங்கிய ரோஜா கணவர்:

தற்போது ஆந்திர மாநிலம் நகரியில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடந்திருக்கிறது. இதில் ஆர்கே செல்வமணியும் கலந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திராவில் கிராமம் மற்றும் நகர்புற மக்களுக்காக பல்வேறு பொதுநல திட்டங்களை அரசு செயல்படுத்தி கொடுத்திருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியோடு தற்போது வாழ்கிறார்கள். இந்த வாழ்க்கை அப்படியே தொடர வேண்டும் என்றால் ஒய் எஸ் ஆர் ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதலமைச்சராகவே இருக்க வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறார். தற்போது செல்வமணி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் பணியாற்ற தொடங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news